கமலின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறதா?

நடிகர் கமல்ஹாசன் தனது தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

கமலின் அடுத்த படம் தேவர்மகன் 2 .. அப்போ அரசியல்?- வீடியோ

சென்னை: இந்தியன் 2வுக்கு பிறகு தேவர்மகன் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பிறகு பொது வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அக்கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன். இருப்பினும் நடிப்பையும் விட்டுவிடவில்லை.

Kamals Thevarmagan to get its sequel

விஸ்வரூபம் இரண்டாம் ரிலீசுக்கு பிறகு, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே சபாஷ் நாயுடு பட வேலைகளும் ஒருபக்கம் நடக்கிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கு பிறகு அவரது மிகவும் பிரபல திரைப்படமான தேவர்மகன் இரண்டாம் பாகத்தில் கமல் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனையில் அவர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேவர்மகன் படத்தை சிலாகித்து கமல்ஹாசன் பேசினார்.

[ ரஜினியுடன் மோதும் அஜித்... பொங்கல் நமக்கு செம எண்டர்டெயின்மெண்ட் தான்! ]

ஆனால் இந்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்தியன் 2க்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாக செயல்பட கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார். இதனால் தேவர்மகன் இரண்டாம் பாகம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X