கர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான்…பா ரஞ்சித் ட்விட் !

சென்னை : கர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான் என இயக்குனர் பா ரஞ்சித் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL

கர்ணன் திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது

முதன் முறையாக இணைந்து இசையமைத்த அப்பா மகன்.. யுவன் - இளையராஜா காம்போவில் கம்பைனான 'தட்டிப்புட்டா'! .

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் தங்களுக்கு கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

கர்ணன்

கர்ணன்

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் மாரிசெல்வராஜ். இவரின் அடுத்தப்படமான கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பக்கபலமான இசை

பக்கபலமான இசை

96 புகழ் கௌரி கிஷான் ,லட்சுமி பிரியா சந்திரமௌலி, லால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இசை பக்கபலமாக அமைந்துள்ளது.

திட்டமிட்டபடி படம் ரிலீஸ்

திட்டமிட்டபடி படம் ரிலீஸ்

அதே நேரத்தில், கொரோனா பரவல் காரணமாக தமிழக தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து 50 சதவீகித இருக்கையுடன் மட்டுமே செயல் பட அனுமதி அளித்துள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் படம் வெளியாகுமா என்ற அச்சத்தில் இருந்தனர். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு திட்டமிட்டடபடி படம் வெளியாகும் என்று கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்ணன் எல்லோர் மனத்தை வெல்வன்

கர்ணன் எல்லோர் மனத்தை வெல்வன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் மாரி செல்வராஜ், தாணு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட கர்ணன் படக்குழுவினர், ரசிகர்களுடன் முதல்காட்சியை கண்டு களித்தனர். கர்ணன் படம் குறித்து பா ரஞ்சித் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதில், கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான். மாரி செல்வராஜின் வியக்கத்தக்க திரைமொழி, தனுஷின் அபாரமான நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞசர்களின் அசாத்திய வேலைப்பாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு நன்றிகள். கொண்டாடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X