அவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்!
கருணாஸுக்கும் கஸ்தூரிக்கும் உள்ள நினைவுகளை கருணாஸ் பகிர்ந்துகொண்டார்
Recommended Video

சென்னை: நடிகர் கருணாஸ் நடிகை கஸ்தூரியுடன் உள்ள பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
ராஜ் சேதுபதி இயக்கத்தில் தயாரிப்பாளர் ஆர்கே.சுரேஷ் தீவிற அஜித் ரசிகராக நடித்திருக்கும் படம் பில்லா பாண்டி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.அவ்விழாவில் கலந்துகொண்ட நடிகர் கருணாஸ், அவருடைய கல்லூரி காலங்களில் நடந்த விஷயங்களை அசைபோட்டார்.

பில்லா பாண்டி திரைப்பட விழாவில் நடிகை கஸ்தூரியும் கலந்துகொண்டார். அவர் பேசி முடித்ததும் ரகசியமாக சில விஷயங்களை கஸ்தூரியிடம் கேட்டுவிட்டு பேசத் தொடங்கினார்.
அப்போது, சில தினங்களுக்கு முன்பு வைஷ்ணவா கல்லூரி வழியே காரில் சென்றபோது நண்பர் ஒருவர் நடிகை கஸ்தூரி இங்குதான் படித்தார் என சொன்னதாகவும், இல்லை அவர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார் என கருணாஸ் பதிலளித்ததாகவும் அவர் உண்மையிலேயே எங்கு படித்தார் என்பதை இப்போது கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன் எனவும் சொன்னார்.
கஸ்தூரி எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்தான், நான் கன்பார்ம் பண்ணிட்டேன். அப்படியென்றால் எத்தனை நாள் அந்த கல்லூரி வாசலில் நின்றிருப்பேன்.. வாட்ச்மேன் வேலை பார்த்திருப்பேன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
['3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு!]
"நான் முதன்முதலில் கஸ்தூரியை வைஷ்ணவா கல்லூரியில் எத்திராஜ் கல்லூரி மாணவியாகப் பார்த்தேன், அங்கு நடைபெற்ற கல்ச்சுரலில் கலந்துகொள்ள வந்திருந்தார். நான் நந்தனம் கலைக்கல்லூரி சார்பாக கல்ச்சுரலில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். கஸ்தூரி சிறப்பாக முன்னேறி இறுதிப்போட்டி வரைக்கும் வந்தார் என்று சொன்னார்.
இவ்வளவும் எஸ்டிடியும் எதற்கு என்றால், ஒருமுறையாவது மைக் முன்னாடி வந்துவிட மாட்டோமா என ஏங்கிய கருணாஸ், நடிகராகவும் பாடகராகவும் அரசியல் பிரமுகராகவும் சாதித் விஷயங்களைச் சொல்வதற்குத்தான். கருணாஸ் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கஸ்தூரி பூரித்துப்போய் புன்னகையை உதிர்த்துக்கொண்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











