அருமை.. எப்படி எடுத்துருக்காங்க பாருங்க.. பிரபல நடிகை க்ளிக் செய்த சூரிய கிரகணம் போட்டோஸ்!

சென்னை: பிரபல நடிகை எடுத்த சூரிய கிரகண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் மிக நீண்ட நேர சூரிய கிரகணம் இன்று தெரிந்தது. காலை 9.15 மணிக்கு தொடங்கிய இந்த சூரிய கிரகணம், 2.30 மணி வரை நீடித்தது.

வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்கக் கூடாது உள்ளிட்ட பல அறிவுரைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் பியூமி.. நாங்களும் வரலாமா என நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்!

அறிவியலும் ஆன்மிகமும்

அறிவியலும் ஆன்மிகமும்

சூரிய கிரகணத்தை சுற்றி பல்வேறு கதைகள் எப்போதுமே சொல்லப்பட்டு வருகின்றன. சூரிய கிரகண நேரத்தில் உணவுகளை உண்ணக் கூடாது என்றும், சில நல்ல காரியங்களை செய்யக் கூடாது என்றும் கூறுகின்றனர். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்காமல், அதற்கான பிரத்யேக கண்ணாடிகளை அணிந்துக் கொண்டு, இந்த அரிய நிகழ்வை காணலாம் என அறிவியல் கூறுகிறது.

பிரபல நடிகையின் க்ளிக்

பிரபல நடிகையின் க்ளிக்

சென்னையில், காலையில் இருந்தே மேக மூட்டமாக இருப்பதால், சூர்ய கிரகணம் பல இடங்களில் சரிவர தெரியவில்லை. சில இடங்களில் சூர்ய கிரகணம் நன்றாகவே தெரிந்தது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி சூர்யா கிரகணத்தை போட்டோ எடுத்து அதனை டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்

தந்தையர் தின வாழ்த்துக்கள்

காலையிலேயே தந்தையர் தினத்தை முன்னிட்டு, ரசிகர் ஒருவர் ஷேர் செய்த இந்தியன் படத்தின் "பச்சை கிளிகள் தோளோடு" பாடல் வீடியோவை லைக் செய்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் நடிகை கஸ்தூரி. அந்த பதிவுக்கு கீழே அவரது ரசிகர்கள் அவருக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இப்படி சாப்பிடுங்க

இப்படி சாப்பிடுங்க

தந்தையர் தினம், சூரிய கிரகணம், சர்வதேச யோகா தினம் என பல தினங்கள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உடல் ஆரோக்கியாமாக இருக்க, எளிதில் சீரணிக்கக் கூடிய உணவுகளான மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்த்து ஃபுருட் சாலட் செய்து சாப்பிடுங்கள் என குக்கரி டிப்ஸும் கொடுத்திருக்கிறார்.

More from Filmibeat

Read more about: kasturi கஸ்தூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X