KH 235: கமலை இயக்க ரெடியாகும் பா ரஞ்சித்... விக்ரம் ஆடியோ வெளியீட்டில் சொன்னது நியாபகம் இருக்குதா?
சென்னை: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கமல் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது கமலை அவரது அலுவலகத்தில் இயக்குநர் பா ரஞ்சித் சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகிறது.
இதனால் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித்தும் கமல்ஹாசனும் சொன்னபடி புதிய படத்தில் இணைகிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கலை இருக்கும் வரை நீங்க இருப்பீங்க.. கலாதபஸ்வி கே. விஸ்வநாத்துக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி!

கமல்ஹாசனை சந்தித்த பா ரஞ்சித்
கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். இதனையடுத்து இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஹெச் வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் கமல் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் பா ரஞ்சித் கமல்ஹாசனை சந்தித்த போட்டோ வைரலாகி வருகிறது.

உருவாகிறதா KH 235?
கடந்தாண்டு கமலின் பிறந்தநாளையொட்டி அவரது அடுத்த படம் குறித்த அப்டேட் அபிஸியலாக வெளியானது. அதன்படி கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது உறுதியானது. இந்தப் படத்திற்கு முன்னதாக ஹெச் வினோத் இயக்கும் ஒரு படத்தில் கமல் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கான வேலைகளை ஹெச் வினோத் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது பா ரஞ்சித்தும் கமலை சந்தித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் மேடையில் எடுத்த முடிவு
முதலில் ஹெச் வினோத்துக்கு பதிலாக தான் பா ரஞ்சித் கமல் படத்தை இயக்குவதாக சொல்லப்பட்டது. ஆனால், பா ரஞ்சித் தற்போது சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். அதனால் கமலின் 235வது படத்தை தான் ரஞ்சித் இயக்குவார் என சொல்லப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி அசுரத்தனமான வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித்தும் கலந்துகொண்டார்.

மதுரை கதைக்களத்தில் கமல்
அப்போது மேடையில் பேசிய பா ரஞ்சித், கமல் சாருக்காக ஒரு கதை ரெடியாக இருக்கிறது. அது மதுரை பின்னணியில் இருக்கும் என கூறி செம்ம சர்ப்ரைஸ் கொடுத்தார். அதே மேடையில் கமலும் ரஞ்சித்திடம் ஓக்கே சொன்னார். சீக்கிரம் கதை ரெடி பண்ணுங்க, சேர்ந்து படம் பண்ணலாம் என அதிரடியாக அறிவித்தார். விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருவரும் பேசிக்கொண்டது தான் தற்போது அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு வருமா?
விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் சொன்னபடி கமல் - பா ரஞ்சித் கூட்டணி விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் இந்தக் கூட்டணி பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது பா ரஞ்சித்தும் கமலும் சந்தித்துக்கொண்ட போது KH 235வது படத்தின் கதை குறித்து தான் என சொல்லப்படுகிறது. மதுரை பின்னணியில் அரசியல் கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் கமலை பா ரஞ்சித் சந்தித்துக்கொண்ட புகைப்படம் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











