twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலை இருக்கும் வரை நீங்க இருப்பீங்க.. கலாதபஸ்வி கே. விஸ்வநாத்துக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி!

    |

    சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மூத்த இயக்குநர் கே. விஸ்வநாத் காலமானார். கமல்ஹாசன் நடித்த 'சலங்கை ஒலி' திரைப்படத்தை இயக்கியவர் கே. விஸ்வநாத். மறைந்த தனது கலையுலக குருவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது கைப்பட எழுதிய புகழஞ்சலி கடிதத்தை ட்வீட்டாக போட்டு மாஸ்டருக்கு ராயல் சல்யூட் வைத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராக திகழ்ந்தவர் இயக்குநர் கே. விஸ்வநாத். ஒளிப்பதிவாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்த விஸ்வநாத் 1965ம் ஆண்டு இயக்குநராக மாறினார்.

    அதன் பின்னர் இவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஹிட் அடித்தது மட்டுமின்றி விருதுகளையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    5 தேசிய விருதுகளை வென்ற பிரபல இயக்குநர் கே. விஸ்வநாத் காலமானார்.. பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி 5 தேசிய விருதுகளை வென்ற பிரபல இயக்குநர் கே. விஸ்வநாத் காலமானார்.. பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி

    கமலின் சலங்கை ஒலி

    கமலின் சலங்கை ஒலி

    1983ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் சாகர சங்கமம் என்றும் தமிழில் சலங்கை ஒலி என்றும் வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமல்ஹாசன், ஜெயப்பிரதா, ஷைலஜா, சரத்பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சலங்கை ஒலி படத்துக்காக இளையராஜா இசையமைத்த அத்தனை பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன

    கமலின் குரு

    கமலின் குரு

    கே. பாலசந்தரை தொடர்ந்து சினிமாவில் கமல்ஹாசன் இன்னொரு குருவாகவே கே. விஸ்வநாத்தை கருதினார். சமீபத்தில் கூட அவர் உடல்நலக் குறைவு அடைந்ததாக தகவல் தெரிந்ததுமே அவரை தேடிப் போய் பார்த்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. கே. விஸ்வநாத்தின் இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

    கலாதபஸ்வி கே. விஸ்வநாத் காரு

    கலாதபஸ்வி கே. விஸ்வநாத் காரு

    கலைக்காக பல ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ள இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவு செய்தி அறிந்த நிலையில், தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புகழஞ்சலி செலுத்தி உள்ளார் கமல்ஹாச்ன. "கலாதபஸ்வி கே. விஸ்வநாத் காரு கலையின் அழியாத்தன்மை குறித்து ஆதியும் அந்தமும் அறிந்தவர். அவரது கலை அவரது மறைவை தாண்டியும் பல நூறு ஆண்டுகள் கொண்டாடப்படும். அவரது கலையின் உன்னதமான ரசிகன் நான் - கமல்ஹாசன்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்.

    கமல் ரசிகர்கள் இரங்கல்

    கமல் ரசிகர்கள் இரங்கல்

    சமீபத்தில் கே. விஸ்வநாத்தை சந்தித்து கமல் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு கமல்ஹாசனின் ரசிகர்களும் தலை சிறந்த இயக்குநரான கே. விஸ்வநாத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Kamal Haasan writes a heartfelt note for Late Director K Viswanath. Kamal Haasan acted in Salangai Oli movie which was directed by the great legendary Director K Viswanath and grabs many accolades to Kamal Haasan also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X