பாழடைந்த வீடு.. வெளிநாட்டுக்கு செல்லப்போகிறாரா கனகா?.. சந்திப்பின்போது நடந்ததை பகிர்ந்த குட்டி பத்மினி
சென்னை: Kanaka (கனகா) நடிகை கனகாவை சந்தித்தபோது உரையாடப்பட்ட விஷயத்தை குட்டி பத்மினி பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் படமாக அமைந்தது கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 1989ஆம் ஆண்டு ரிலீஸானது. யாரும் எதிர்பார்க்காதவிதமாக அந்தப் படம் கோலிவுட்டில் மெகா ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

கனகா: இந்தப் படத்தின் மூலம்தான் கனகா சினிமாவில் என்ட்ரி ஆனார். நடிகை தேவிகா தனது மகள் கனகாவை முதலில் சினிமாவில் நடிக்க வைப்பதற்கு விரும்பவே இல்லை. ஆனால் கங்கை அமரன் தேவிகாவை சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தார். இருந்தாலும் இந்தப் படம் ஓடாது. ஒரு படத்தோடு கனகா நடிப்பதை நிறுத்தி வைத்துவிடலாம் என்றே நினைத்தார் தேவிகா. விதி வேறு மாதிரி இருந்து படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க கனகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன.
முன்னணி ஹீரோயின்: அதன்படி ரஜினியுடன் அதிசய பிறவி, தங்கமான ராசா, பெரிய இடத்து பிள்ளை, துர்கா, எங்க ஊரு ஆட்டுக்காரன், அம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார். அவரது கிராஃப் உச்சத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரது தாய் தேவிகா உயிரிழக்க ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானார் கனகா. அதுமட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னொரு பிரச்னையும் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.
Kanaga: "கரகாட்டகாரன் கனகாவா இது..? ராமராஜன் கூட இத நம்பமாட்டாரே... தீயாகப் பரவும் போட்டோ!
சந்தித்த குட்டி பத்மினி: தனிமைப்படுத்திக்கொண்ட கனகா பல வருடங்களாக சினிமாவை சேர்ந்த யாரையும் சந்திக்காமல் இருந்தார். அவர் குறித்து பலரும் பேட்டி அளித்து வந்தாலும் கனகா மட்டும் வெளியே வராமல் இருந்தார். இந்த சூழலில் நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் கனகாவை சந்தித்தார். அப்போது கனகாவும் அவர் முத்தம் கொடுக்கும்படியான புகைப்படத்தையும் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த பலரும் கனகாவை கண்டு சந்தோஷம் அடைந்தனர்.
குட்டி பத்மினி பேட்டி: இந்நிலையில் நடிகை கனகாவை சந்தித்தது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு குட்டி பத்மினி பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், “எதார்த்தமாக கனகா வீட்டை கடந்து நான் சென்றபோது அங்கு விளக்கு எரிவதை பார்த்தேன். அவங்க யாரையும் சந்திக்கிறது இல்லை.இருந்தாலும் வீட்டில் விளக்கு எரிந்ததால் உள்ளே கண்டிப்பாக இருப்பார் வெளியே வரும்போது பார்க்கலாம் என எனது காரில் காத்திருந்தேன்.
வெளியே வந்த கனகா: அந்த சமயத்தில் அவரும் வெளியே வந்தார். உடனே பார்த்து பேசினேன். கனகாவை சந்தித்தபோது அவருக்கும் அவரது அப்பாவுக்கும் சமாதானம் ஆகிவிட்டதாக சொன்னார். என்னை பார்த்ததிலும் அவருக்கு சந்தோஷம்தான். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நானும் உங்க அம்மா மாதிரிதான் என்று சொன்னேன். அதற்கு அவரோ, நீங்கள் எப்படி எனக்கு அம்மாவாக முடியும். அம்மாவுக்கு நீங்கள் மகளாகத்தான் நடித்திருக்கீங்க அதனால் நீங்கள் எனக்கு அக்கா என்று சொன்னார்.
பாழடைந்த வீடு: கனகா இப்போது இருக்கும் வீடு அவரின் அம்மா வாழ்ந்த வீடு. எனவே இப்போது அது பாழடைந்த கோயில் மாதிரி இருக்கிறது. இப்படி ஒரு வீட்டில் ஏன் தனியாக இருக்க வேண்டும். ஒரு அழகான ஃப்ளாட்ல இருந்தால் பாதுகாப்பாக இருக்குமே என்று சொன்னேன். அவர் அதை ஆமோதித்து கேட்டுக்கொண்டார்.
மேலும் அவரிடம் உனக்கு கல்யாணம் ஆகல, குழந்தையும் இல்லை. இந்த சொத்து யாருக்கோத்தான் போகப்போகுது. இப்படி இருக்க வேண்டாம். புது வீடு வாங்கு. வாழ்க்கையை அனுபவி. வெளிநாட்டுக்கு டூர் போயிட்டு வானு சொன்னேன். அவங்களும் தனக்கு வெளிநாடு போறது பிடிக்கும்னு சொன்னார். அப்புறம் என்ன வெளிநாடு போய் சுத்திட்டு வா. வாழ்க்கையை கொண்டாடு என்று கூறினேன். அவரும் சந்தோஷமாக கேட்டுக்கிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











