Leo box office: ரூ.500 கோடி வசூலைக் கடந்த லியோ.. பாக்ஸ் ஆபீஸ் கிங் விஜய்!
சென்னை: லியோ திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி உள்ள நிலையில், பத்தாம் நாள் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ பலவிதமான சர்ச்சைகளை கடந்த பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளி வருகிறது.

லியோ படத்தில் விஜய்யின் அதிரடியான ஆக்ஷன் காட்சியில் மிரட்டி இருப்பதால், அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
லியோ: த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ந் தேதி வெளியானது. இந்த படத்தில் பார்த்திபன், லியோ தாஸ் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இரண்டு குழந்தைகளின் பெற்றோராக விஜய் மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர். கில்லி படத்திற்கு பிறகு த்ரிஷா லியோ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தரமான சம்பவம் செய்த லியோ: கைதி, விக்ரம் ஆகிய படங்களை விட லியோ சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், லியோ படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. முதல் நாள் வசூல் ரூ.148 கோடியை வசூலானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதையடுத்து முதல் வாரத்தில் படம் ரூ.461கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது.
Leo Free Tickets: “மூனு பொருள் வாங்கினா லியோ டிக்கெட் Free..” என்னய்யா நடக்குது அங்க..?
பாக்ஸ் ஆபீஸ் கிங் விஜய்: ஆயுத பூஜை முடிந்து படம் தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. வெள்ளிக்கிழமை வேலை நாட்கள் என்பதால், டிக்கெட் விற்பனை மந்தமாகவே இருந்தது. அன்று, தமிழகத்தில் ரூ 5.5 கோடியாகவும், கேரளாவில் ரூ1.25 கோடியை மட்டுமே வசூலித்தது.
சனிக்கிழமையான நேற்று படத்தின் வசூல் சற்று அதிகரித்தது. தமிழகத்தில் நேற்று லியோ படம் ரூ.10.3 கோடியை வசூல் செய்துள்ளது. பத்து நாளில் ரூ.500 கோடியை வசூல் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படம் ரூ.500 கோடியை எட்டி உள்ளதை அடுத்து, விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











