தளபதி டேக் ஓவர்.. சன் பிக்சர்ஸின் ‘டிசி’ பட ரிலீஸ் தேதியும் தள்ளிப்போயிடுச்சே.. எப்போ தெரியுமா?

சென்னை: லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள 'டிசி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், ஜூலை 31ம் தேதி படம் வெளியாகாது என்றும் புதிய தேதியையும் சன் பிக்சர்ஸ் சற்றுமுன் அறிவித்துள்ளது.

விஜய்யின் ஜன நாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கண்டிப்பாக 2 வாரமாவது தியேட்டரில் அந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ஜூலை 31 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட படங்கள் எல்லாம் ஆகஸ்ட்டுக்கு ஓடிப்போகும் நிலை உருவாகியுள்ளது.

Lokesh Kanagaraj hero debut movie DC Release Postponed due to Jana Nayagan release

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியான ஹேங்கோவா பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read
Jana Nayagan: ஜூலை 23ம் தேதியே ஜன நாயகன் ரிலீஸ்.. 22ம் தேதி ஸ்பெஷல் ப்ரீமியர் இருக்குமா?
Jana Nayagan: ஜூலை 23ம் தேதியே ஜன நாயகன் ரிலீஸ்.. 22ம் தேதி ஸ்பெஷல் ப்ரீமியர் இருக்குமா?

டிசி படத்துக்கு 'ஏ' சான்றிதழ்: கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படத்துக்கும் சென்சார் போர்ட் 'ஏ' சான்றிதழ் அளித்தது. இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டிசி' படத்துக்கும் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கும் 'ஏ' சான்றிதழ் தான். தியேட்டருக்கு குடும்பத்துடன் குழந்தைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு வரவேண்டாம் என்கிற முடிவில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 'ஏ' சான்றிதழ் படங்களாக வெளியாகின்றனவா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அதிக ரத்தம் மற்றும் வன்முறை காட்சிகள் தான் 'ஏ' சான்றிதழ் வழங்க காரணம் என்கின்றனர்.

தள்ளிப்போன ரிலீஸ் தேதி: ஜூலை 31ம் தேதி டிசி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு போஸ்டர்கள் எல்லாம் வெளியாகின. ஆனால், தளபதி படம் வந்தால் தள்ளிப்போய் தான் ஆகவேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட சன் பிக்சர்ஸ் தற்போது ஆகஸ்ட் 7ம் தேதி 'டிசி' படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படமும் வெளியாக காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X