ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ்.. மனைவி என்ன சொன்னார் டைரக்டரே?.. செம கடுப்பான லோகேஷ் கனகராஜ்
சென்னை: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர். இதுவரை இயக்கிய படங்களில் லியோ படம் மட்டும்தான் அவருக்கு சுமாரான ஹிட்டை கொடுத்திருக்கிறது. மற்ற அனைத்து படங்களுமே அவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றன. அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவிருக்கும் அவர்; தற்போது இனிமேல் என்ற ஆல்பம் பாடலின் மூலம் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவரது மனைவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு லோகேஷ் காண்டாகி பதிலளித்திருக்கிறார்.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். அப்படி அவர் முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட் இல்லையென்றாலும் டீசன்ட்டான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அவரது மேக்கிங்கில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எட்டிப்பார்த்தார்.

கைதியால் சிக்கிய லோகேஷ்: மாநகரம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கினார். அந்தக் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்கு அவர் எழுதியதன் மூலமே அவர் தனது கதையின் மேல் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் கைதி கதையை கேட்ட தயாரிப்பு நிறுவனம் பெரிய ஸ்டாரிடம் போகலாம் என கூற அதன் பிறகே கார்த்தி படத்துக்குள் வந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனால் அவர் முன்னணி ஹீரோக்களின் பார்வையில் சிக்கினார்.
விஜய்யுடன் லோகேஷ்: முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்தார்அதுவரை விஜய்யை யாரும் காண்பிக்காத வகையில் காண்பித்து படத்தின் வெற்றியை அறுவடை செய்தார் லோகேஷ். அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது, ஹீரோவின் பெயரை விரிவாக கூறாதது என மேக்கிங்கில் வித்தியாசத்தை காண்பித்திருந்தார் அவர். அதனையடுத்து இயக்கிய விக்ரம் மெகா ஹிட்டானது.
அடுத்தடுத்த படங்கள்: அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. லியோ படத்தை முடித்திருக்கும் லோகேஷ் அடுத்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தையும், கைதி படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்க கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர ரோலக்ஸ், இரும்பு கை மாயாவி, விக்ரம் 2 ஆகிய படங்களையும் இயக்குகிறார்.இதனால் படு பிஸியான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

நடிகர் லோகேஷ்: இதற்கிடையே அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக லோகேஷ் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூனில் கெஸ்ட் ரோலில் தோன்றிய லோகேஷ்; இப்போது ஸ்ருதிஹாசனுடன் இனிமேல் என்ற தனியிசை பாடலில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் பாடலின் வீடியோ நேற்று வெளியானது. லோகேஷ் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார்.
நாங்க எல்லாரும் லூசுதான்.. கமல்ஹாசனை விட தக் லைஃப் டைட்டிலுக்கு ஸ்ருதிஹாசன் கச்சிதமா இருக்காரே!
பத்திரிகையாளர் சந்திப்பு: இந்நிலையில் நேற்று இனிமேல் ஆடியோ லான்ச்சை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள் லோகேஷும், ஸ்ருதி ஹாசனும். அப்போது லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர் ஒருவர், ஸ்ருதியுடனான ரொமான்ஸ் குறித்து லோகேஷின் மனைவி என்ன சொன்னார் என்பதை தெரிந்துகொள்வதற்காக, உங்களின் மனைவி உங்களை இயக்குந்ராக பார்த்துவிட்டார்; நடிகராக எப்படி பார்க்கிறார் என்ற லோகேஷிடம் சுற்றி வளைத்து கேட்டார்.
லோகேஷின் பதில்: அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்விகளை ஆரம்பத்திலிருந்தே நான் ஒதுக்கிவருகிறேன். அதை பற்றி இனிமேலும் பேச விரும்பவில்லை. ஏனெனில் நான் சினிமாவுக்குள் வரும்போதே அது வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கும் உங்களுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும். பாராட்டுவது, விமர்சிப்பது என எதுவாக இருந்தாலும் நமக்குள்ளான தொடர்பே போதும். எனது வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியக்கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











