G.D.N Second Single - இந்தியாவே எதிர்பார்க்கும் ஜி.டி.என்.. நாளை ரிலீஸாகும் இரண்டாவது சிங்கிள்

சென்னை: கிருஷ்ணகுமார் ராமகுமார் என்பவரது இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் திரைப்படம் ஜி.டி.என். இந்தியாவின் எடிசன் என புகழப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இதில் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இதுவரை நாயுடு பற்றி அறியாத பல விஷயங்கள் இதன் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்திலிருந்து புதிய அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்திய திரையுலகில் ஃபேமஸான நடிகர்களில் ஒருவர் மாதவன். அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர்; முதல் படத்திலேயே அனைத்து ரசிகைகளையும் கவர்ந்தார். எனவே இங்கே அவருக்கான க்ரேஸ் பீக்கில் இருந்தது. தொடர்ந்து வெற்றியையும், தோல்வியையும் மாறி மாறி சந்தித்த அவர்; ஹிந்தியிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வர தொடங்கினார். அங்கேயும் அவருக்கான ரெஸ்பான்ஸ் சூப்பராகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Madhavan s GDN Announces Second Single Manasa Parichaye Release Date Revealed
Photo Credit:

ராக்கெட்ரி மாதவன்: இத்தனை வருடங்கள் ஹீரோவாக மட்டும் இருந்த அவர்; கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் அவதாரத்தையும் எடுத்தார். இஸ்ரோவில் பணியாற்றிய நம்பிராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை இயக்கினார். அதில் அவரே நம்பியாகவும் நடித்திருந்தார். சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் தேசிய விருதை வென்று கெத்து காண்பித்தது.

Also Read
GD Naidu: துஷாரா விஜயன் சொன்ன அந்த விஷயம்.. சூப்பரா இருக்கே.. எல்லா நடிகைகளுக்கும் இப்படி அமையுமா?
GD Naidu: துஷாரா விஜயன் சொன்ன அந்த விஷயம்.. சூப்பரா இருக்கே.. எல்லா நடிகைகளுக்கும் இப்படி அமையுமா?

மாதவனின் ஜி.டி.என்: இப்போது அவர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்திருக்கிறார். இதனை கிருஷ்ணகுமார் ராமகுமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தியாவின் எடிசன் என புகழப்படுபவர் ஜி.டி.நாயுடு. ஆங்கிலேயே காலத்தில் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை செய்து; அவர்களுக்கு ஆச்சரிய குறியாகவே தன்னை வைத்திருந்தார். இப்போது அவரது வாழ்க்கை வரலாறு படமாகியிருப்பதால்; அவரைப் பற்றிய இன்னும் பல விஷயங்கள் இளைய தலைமுறையிடம் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவியும் பாராட்டு: குறிப்பாக மாதவனுக்கு பலரும் தங்கள் பாராட்டை தெரிவித்துவருகிறார்கள். இந்திய திறமையாளர்கள் பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளாமலேயே போய்விடுவார்களோ என்ற அச்சத்துக்கு நடுவே மேடி இதேபோன்று தொடர்ச்சியான படங்களை தருவது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஜி.டி.நாயுடுவாக மாதவனே நடித்திருக்கிறார். அவருடன் சத்யராஜ், ஜெயராம், வினய், பிரியாமணி,துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

நாளை இரண்டாவது சிங்கிள்: படமானது மிக விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில்; கடந்த வாரம் ட்ரெய்லரும், அதனைத் தொடர்ந்து முதல் சிங்கிளும் ரிலீஸாகின. அவை இரண்டுமே சூப்பர் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்து வைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளான, 'மனச பறிச்சாயே' நாளை ரிலீஸாகவிருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் பாடலும் இணையத்தில் ட்ரெண்டாகும் என நம்பப்படுகிறது.

Read more about: madhavan மாதவன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X