”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்

Recommended Video

சிம்பு - சுந்தர் சி படத்தில், இரண்டாவது ஹீரோவாக மஹத்- வீடியோ

சென்னை: சுந்தர் சி சிம்பு திரைப்படத்தில் நடிக்கும் மகத்தின் கதாபாத்திரம் பற்றி தெரிய வந்துள்ளது.

சுந்தர் சி இயக்கும் தெலுங்கு பட ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளரான மகத் நடிப்பதாகக் கூறி புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

Mahat Raghavendra becomes lover boy

இந்த படத்திற்கு மகத் வந்த விஷயமே கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

"செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸின்போது சிம்பு ரசிகர்களுடன் நான் இருக்கும் வீடியோவை சுந்தர் சி பார்த்திருக்கிறார். சிம்பு ரசிகர்களிடம் பேசும்போது "சிம்பு கூப்பிட்டால் நடிப்பீங்களா?' என ஒரு ரசிகர் கேட்டார். நான் எவ்ளோ பெரியா ஆளானாலும் சிம்பு கூப்பிட்டால் கண்டிப்பாக பண்ணுவேன் எனக் கூறினேன்.

[நடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்]

அதனால் தான் சுந்தர் சி இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன் என நினைத்திருப்பார் எனத் தோன்றுகிறது. நாங்கள் நண்பர்கள் தான். இருந்தாலும் நான் சிம்புவின் தீவிர ரசிகன். உண்மை என்னவென்றால், சிம்புவைப் பார்த்து தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே வந்தது. அதனால் மீண்டும் அவருடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது.

ரீமேக் என்றாலும், சில விஷயங்களை தமிழுக்காக சுந்தர் சி மாற்றியிருக்கிறார். ஒரு லவ்வர் பாயாக நடிக்கிறேன், எனக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். அது கிட்டதட்ட இரண்டாவது ஹீரோ போன்ற ஒரு கதாபாத்திரம் தான். எனக்கு இரண்டு பாடல்களும் உள்ளன" என்று மகத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X