ஊரே இளையராஜா பாட்டு கேட்கும்.. ஆனால் அவரோ.. இயக்குநர் சொன்ன சுவாரஸ்யமான விஷயம்
சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. படம் அடுத்த வருடம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜா குறித்து மனசெல்லாம் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இளையராஜா என்ற பெயரை தமிழர்கள் யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துவரும் அவரை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். அவரது இசைதான் காலங்காலமாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லிவருகிறது. அடுத்த தலைமுறைக்கும் கண்டிப்பாக இளையராஜாவின் இசை தாலாட்டு கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த அளவுக்கு அவரது இசையின் தாக்கம் தமிழ் சமூகத்தில் கலந்திருக்கிறது.

பயோபிக்: இளையராஜா இப்போது இருக்கும் உயரம் எளிதில் வந்ததில்லை. பல அவமானங்கள், புறக்கணிப்புகளை கடந்துதான் அவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். கண்டிப்பாக இளையராஜாவின் வெற்றி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வெற்றி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரது வாழ்க்கையை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்களுக்கு சந்தோஷம் தரும் செய்தியாக அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இளையராஜா: அதன்படி மெர்குரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். முதலில் பால்கி இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட சூழலில், கேப்டன் மில்லர் படத்தில் ஏற்பட்ட புரிதல் காரணமாக தனுஷின் சிபாரிசின் பேரில் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தின் இயக்குநராக கமிட் செய்யப்பட்டார். படத்துக்கு இளையராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் சினிமாவாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தொடக்க விழா: படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இளையராஜா, தனுஷ், அருண் மாதேஸ்வரன், கமல் ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன், கங்கை அமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் படத்துக்கு கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதேசமயம் பயோபிக்கை அனைவரும் விரும்பும்படி அருண் மாதேஸ்வரன் எடுத்துவிடுவாரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் ஒருதரப்பினர் கிளப்பிவருகின்றனர். அதேபோல் இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களும் பயோபிக்கில் இடம்பெறுமா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்புகின்றனர்.
சந்தோஷ் பேட்டி: இந்நிலையில் இளையராஜா குறித்து மனசெல்லாம் திரைப்படத்தின் சந்தோஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில், ”ஒருமுறை இளையராஜாவுடன் திருச்செந்தூருக்கு காரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பயணம் செய்யும்போது அவர் பாடல் கேட்பதற்கு விரும்பமாட்டார். காரில் ஏறியதும் டிரைவர் பாடல் ஒன்றை போட்டார். உடனே இவர் சத்தத்தை குறைக்க சொன்னார். அதேபோல் பயணத்தின்போது அதிகம் பேசவும் செய்யமாட்டார்” என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், பயணத்தின்போது ஊரே இளையராஜா பாடலை கேட்குது. இளையராஜாவோ பாடலே கேட்கமாட்டாரா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











