என்னப்பா இதெல்லாம்?.. கலாய்க்கப்பட்ட மாஸ்டர் மகேந்திரன்.. கண்ணீர் விட்டு அழுத அப்பா

சென்னை: குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி ஃபேமஸ் ஆனவர் மாஸ்டர் மகேந்திரன். ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோருடன் எல்லாம் நடித்த அவர்; இப்போது வளர்ந்த பிறகு கேரக்டர் ரோலிலும் வில்லன் ரோலிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் கடைசியாக அவர் 29 திரைப்படத்தில் நடித்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க; மின்வெட்டு விஷயத்தில் விஜய்க்கு சப்போர்ட் செய்வதாக கூறி செமத்தியாக வாங்கி கட்டினார் அவர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 90களில் அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். முத்து, மின்சார கண்ணா, நாட்டாமை என பல படங்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்திய அவர்; அந்த காலத்தில் ரொம்பவே பிரபலம். பிறகு வயது ஏறி; ஆளே மாறிப்போன அவர் ஹீரோவாக வெல்ல முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். அதேசமயம் கேரக்டர் ரோலிலும், வில்லன் ரோலிலும் அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார்.

Master Mahendran has stated that his father cried when he was trolled
Photo Credit:

மாஸ்டர் மகேந்திரன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் மகேந்திரன். அதில், "இவ்வளவு நாள் மின்சார தடை இல்லையா? ஜாலியாக இருந்தீர்களா?.. சரி ஆறு மாதங்கள் மின்வெட்டுடன் இருக்க முடியாதா?.. சோலார் சிஸ்டம் என்ற ஒன்றை கண்டுபிடித்தது இவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை. மின்வெட்டு இருந்தால் என்ன? ஆறு மாதங்கள் கேள்வி கேட்காதீர்கள் என சொல்கிறேன்.

Also Read
கயாடு லோஹர் உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. விஜே பார்வதியின் அம்மா இப்படி சொல்லிட்டாங்களே
கயாடு லோஹர் உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. விஜே பார்வதியின் அம்மா இப்படி சொல்லிட்டாங்களே

பதில் எப்படி கிடைக்கும்?: என் வீட்டிலிருந்து கூட மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சோலாரிலிருந்து எப்படி லைட்டை எரிய வைக்க வேண்டும்; ஃபேனை ஓட வைக்க வேண்டும் என எனக்கு தெரியும். விஜய்யிடம் கேள்வி கேட்டால் உடனே மின்சாரம் வந்துவிடுமா?.. எத்தனை காலம்தான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். கேள்வி மட்டும் கேட்டால் பதில் கிடைத்துவிடுமா?.. கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் பதில் கிடைக்கும்" என பேசியிருந்தார்.

மகேந்திரனின் விளக்கம்: அவரது அந்தப் பேட்டி பெரிய ட்ரோலை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்த அவர், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ரீல்ஸ்களால் நான் கூறிய கருத்துக்கள் முழுமையாக இருக்காது. அதுதான் இங்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

உண்மையை அறியவே இல்லை: மின்சார தேவையை சமாளிக்க சோலார் மின்சாரமே சிறந்த வழி என்றும், கொச்சி விமான நிலையம் போன்று நம் மாநிலத்திலும் சோலார் முறையை ஏன் செயல்படுத்தக்கூடாது என்றுதான் கேட்டேன். என்னை திட்டி தீர்ப்பவர்கள் உண்மையை அறியாமல் செயல்படுகிறார்கள். தவறாக புரிந்துகொண்டவர்கள்தான் தற்குறி. நான் தற்குறியா?.. எனது கருத்தில் நான் உருதியாக இருக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

மகேந்திரன் பேட்டி: சூழல் இப்படி இருக்க; தான் ட்ரோலுக்கு உள்ளானபோது தன்னுடைய தந்தை மனநிலைமை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் அவர். அந்தப் பேட்டியில், "எனது அப்பா ஒருநாள் காலையிலிருந்து நான்கு மணி நேரம் டிவி பார்த்தார். அதில் என்னை பற்றித்தான் பேசியிருக்கிறார்கள். அதற்கு பிறகு என்னிடம் வந்து, 'என்னப்பா இது' என கேட்டார். நடந்ததை எல்லாம் விளக்கினேன். உண்மையை தெரிந்துகொண்டதும் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். என்னுடைய அப்பா முதன்முதலில் அழுது பார்த்தேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X