ஹன்சிகா மீண்டும் சிம்புவுடன் சேர்ந்துவிட்டாரா?: எல்லாம் அந்த போட்டோவால் வந்த வினை
சென்னை: தன்னுடைய மஹா படத்தில் சிம்பு நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஹன்சிகா.
வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. அந்த காதல் முறியவில்லை முறிக்கப்பட்டது என்று சிம்பு ஒரு முறை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் மஹா படத்தில் அவர் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
Also Read | அதெப்படி வரலட்சுமிக்கு 'அந்த'ப் பட்டத்தைக் கொடுக்கலாம்.. கொதித்தெழுந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்!
ஹன்சிகா
நானும், எஸ்.டி.ஆரும் மஹா படத்தில் சேர்ந்து நடிக்கிறோம் என்று கூறி ஒரு ஆணும், பெண்ணும் கை கோர்த்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

சிம்பு
அந்த புகைப்படத்தில் இருக்கும் கைகள் உங்களுடையதும், சிம்புவுடையதுமா?. புகைப்படத்தை பார்த்தால் ஏதேதோ நினைக்கத் தோன்றுகிறதே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நிஜம்
ஹன்சிகா படத்தை பற்றி ட்வீட் போட நெட்டிசன்களோ அவர் மீண்டும் சிம்புவுடன் சேர்ந்துவிட்டது போன்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு வட்டம், சிம்பு போன்று ஒரு நல்லவர் உங்களுக்கு கிடைக்க மாட்டார் என்று அவர்களாக பேச்சைத் துவங்கிவிட்டனர்.
திருமணம்
சிம்புவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ள ரசிகர்கள் ஹன்சிகாவை அண்ணி என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











