கெரியரை நாசம் பண்ணிட்டார், சும்மா இருக்க மாட்டேன்: காலா வில்லன் பற்றி குமுறும் நடிகை

By Siva

மும்பை: நானா படேகர் என் கெரியரை நாசமாக்கிவிட்டார். இனியும் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது சீனியர் நடிகரான நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்துள்ளார்.

நானா படேகர் இந்த புகாரை மறுத்துள்ளார். மேலும் தனுஸ்ரீ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

[ சிசிவி, சாமி இருக்கட்டும் பரியேறும் பெருமாளுக்காக மக்கள் செய்த காரியத்தை பாருங்க ]

நானா படேகர்

நானா படேகர்

நானா படேகரால் என் சினிமா வாழ்க்கை நாசமாகிவிட்டது. பட வாய்ப்புகள் இல்லாமல் என் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டது. அவரால் நான் திரையுலகை விட்டு வெளியேறினேன். இனியும் நான் அமைதியாக இருக்க மாட்டேன். அவரிடம் இருந்து எந்த வக்கீல் நோட்டீஸும் இதுவரை வரவில்லை. நான் அதற்காக காத்திருக்கிறேன் என்று தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

பணம்

பணம்

நான் உண்மையை சொல்வதில் இருந்து என்னை யாரும் தடுக்க முடியாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று மிரட்டி என்னை அடக்கிவிட முடியாது. பணத்திற்காக எதுவும் செய்யும் வழக்கறிஞர்களை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. அவர்கள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் தவறு செய்தவர்களை ஆதரிக்கிறார்கள் என்கிறார் தனுஸ்ரீ.

நடவடிக்கை

நடவடிக்கை

நானா படேகர் பல விஷயங்களை கண்டிப்பாக மறைத்திருப்பார். நானா படேகர் மற்றும் அவரின் வழக்கறிஞரை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நானா போன்ற ஆளுக்கு ஆதரவாக உள்ள வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் அசோசியேஷனை கேட்டுக் கொள்கிறேன் என்று தனுஸ்ரீ கூறியுள்ளார்.

ஆதாரம்

நானா படேகரால் அந்த படத்தில் நடிக்க மறுத்து கிளம்பிய தனுஸ்ரீ காரை சிலர் தாக்கியுள்ளனர். 2008ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் நானா படேகர் ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X