twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிசிவி, சாமி இருக்கட்டும் பரியேறும் பெருமாளுக்காக மக்கள் செய்த காரியத்தை பாருங்க

    By Siva
    |

    சென்னை: பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதால் திரையுரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் 120 திரையரங்குகளில் வெளியானது. செக்கச் சிவந்த வானம், சாமி ஸ்கொயர் ஆகிய பெரிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் அளிக்கப்பட்டது.

    குறைவான திரையரங்குகளில் வெளியான போதிலும் பரியேறும் பெருமாளுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர்.

    பரியன்

    பரியன்

    பரியனாக நடித்துள்ள கதிரை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஒரேயொரு கேள்வி தான் எழுகிறது. ஏன்யா, இம்புட்டு திறமையை வைத்துக் கொண்டு ஏன் நிறைய படங்கள் பண்ணுவது இல்லை. நீ நடி ராசா, நாங்க இருக்கோம் ஆதரிக்க என்று தியேட்டர்களில் ரசிகர்கள் சொல்வதை கேட்க முடிகிறது. படத்தை தன் தோள்களில் தாங்கியுள்ளார் கதிர்.

    ஆதரவு

    பா. ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் ஆகிய இரண்டு பெரிய படங்களுக்கு இடையே மக்களை காந்தமாக இழுத்துக் கொண்டிருக்கிறது பரியேறும் பெருமாள். அந்த படம் ஓடும் தியேட்டர்கள் ஃபுல்லாக உள்ளது. மக்களின் ஆதரவை பார்த்துவிட்டு தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ரஞ்சித்தும் கோரிக்கை விடுத்தார். மக்களின் குரலும் சேர்ந்ததால் பலன் கிடைத்துள்ளது.

    எஸ்.ஆர். பிரபு

    தமிழ்திரை வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட( #அருவி #மாநகரம் ). மக்கள் ஆதரவை #பரியேறும்பெருமாள் பெற்றுவிட்டது! காட்சிகள் உயரும்! என்று தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    எவ்வளவு பெரிய படங்கள் வந்தாலும் நல்ல படம் வந்தால் அதை கொண்டாடத் தவற மாட்டோம் என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். சாதியால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் திரையில் பார்ப்பது பரியனை அல்ல தங்களை தான். அதனால் தான் பரியேறும் பெருமாளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

    பெருமை

    பெருமை

    சமூக வலைதளங்களில் இன்னும் பரியேறும் பெருமாள் புராணம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாள் படம் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தியேட்டர் உரிமையாளர்களுக்கு மக்களே கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றால் படம் பற்றி நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை.

    English summary
    The number of screens for Pariyerum Perumal has increased after people asked the theatre owners to do so by supporting the movie big time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X