'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்
மும்பை: பாலிவுட் நடிகை நந்திதா தாஸை நெட்டிசன்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை நந்திதா தாஸின் தந்தை பிரபல ஓவியர் ஜதின் தாஸ். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நிஷா போரா என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
ஜதின் நிஷாவின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.
[பெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்?: ஆண்ட்ரியா]
நிஷா
கடந்த 2004ம் ஆண்டு திருமணமான புதிதில் ஜதின் தாஸை சந்தித்திருக்கிறார் நிஷா போரா. தனக்கு சில நாட்கள் உதவியாளராக இருக்குமாறு ஜதின் கேட்க நிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் தனிமையில் அவர் நிஷாவை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். மேலும் அவரின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார் அந்த பெண். அந்த சம்பவம் குறித்து தற்போது அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இல்லை இல்லை
நிஷாவின் புகாரை மறுத்துள்ளார் ஜதின் தாஸ். அவரின் புகார் அசிங்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜதின் தாஸ் பத்ம பூஷன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீ டூ இயக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நந்திதா தாஸ் இது குறித்து தெரிவித்துள்ள கருத்து திருப்திகரமாக இல்லை.
நந்திதா தாஸ்
என் தந்தை மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அவர் மறுத்துள்ளார். மீ டூ இயக்கத்தை ஆதரிக்கும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். என் கண்ணியத்தை நம்புவோரை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். உண்மை ஜெயிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார் நந்திதா. அவரின் விளக்கத்தை ஏற்க முடியாது என்று பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
விமர்சனம்
நிஷா போரா தவிர அனுஸ்ரீ மஜும்தார் என்ற பெண்ணும் ஜதின் தாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுவே வேறு யார் மீதாவது புகார் தெரிவித்திருந்தால் இந்நேரம் நந்திதா தாஸ் போர்க்கொடி தூக்கியிருப்பார். தந்தை என்பதால் பார்த்தும் பார்க்காதது போன்று நடந்து கொள்கிறார் என்று நெட்டிசன்கள் விளாசுகிறார்கள்.
நடிப்பு
மீ டூ இயக்கத்தை ஆதரிக்கும் நந்திதா தாஸின் குட்டு உடைந்துவிட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











