ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பை விட அல்லு அர்ஜுனின் நடிப்பு சூப்பரா?.. தேசிய விருது மீதே நம்பிக்கை போச்சே
சென்னை: என்டிஆர் முதல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என எந்தவொரு தெலுங்கு நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரமாக முதல்முறையாக ஒரு டோலிவுட் நடிகரான அல்லு அர்ஜுன் தேசிய விருது வாங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி தான். அவருக்கு ரசிகர்களின் பாராட்டுக்களும் நிச்சயம் உள்ளன.
ஆனால், அதே ஆண்டு வெளியான ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடித்த உணர்வுப்பூர்வமான நடிப்பை விட புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த நடிப்பு சூப்பரா என அவரிடம் கேட்டாலே இல்லை என்று தான் சொல்வார்.

இந்த விஷயம் தேசிய விருதுகள் வழங்கும் தேர்வு குழுவுக்கு எப்படி தெரியாமல் போய் விட்டது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடத்தல் மன்னன் கதாபாத்திரம்: சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்தல் தொழில் செய்யும் சமூக விரோதி கேங்ஸ்டராக நடித்திருப்பார். அவருக்கு எப்படி சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுத்தாங்க என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டோலிவுட்டில் எடுத்துக் கொண்டாலே ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் போட்டிப் போட்டு நடித்த ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவருமே அந்த விருதுக்கு அல்லு அர்ஜுனை விட அதிகம் தகுதியுடையவர்கள் என தெலுங்கு சினிமா ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய விருதுக்கு உண்டான மதிப்பு போச்சு: ஆஸ்கர் விருதுகள் இன்னமும் கமர்ஷியல் படங்கள் பல கோடி சம்பாதித்தாலும், அதனை ஒதுக்கி வைத்து விட்டு கருத்துள்ள சினிமாக்களுக்கும் உணர்ச்சி பூர்வ நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கும் தான் விருதுகளை கொடுத்து வருகிறது.
புஷ்பா போன்ற கமர்ஷியல் படங்கள் வசூலை குவிக்கவும் சூர்யாவின் ஜெய்பீம் போன்ற படங்கள் விருது படங்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அதன் மீதான நம்பிக்கையே போய் விட்டது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அசோக் செல்வன் கேள்வி: தேசிய விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. குறிப்பாக கடைசி விவசாயி படத்துக்கு வாழ்த்துகள். ஆனால், ஜெய்பீம் படத்துக்கு ஏன் ஒரு விருது கூட இல்லை என நடிகர் அசோக் செல்வனே ட்வீட் போட்டிருப்பது கோலிவுட் ரசிகர்களை மேலும், கொந்தளிக்க வைத்துள்ளது.
ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடித்த நடிப்புக்கு அல்லு அர்ஜுனின் நடிப்பு நிச்சயம் கொஞ்சம் கூட இணையாகாது. தேசிய விருதுகள் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Robo Shankar - பத்து நிமிஷத்துல பாடி வந்துடும்னு சொன்னாங்க.. நான் வந்தேன்.. ரோபோ ஷங்கர்
.


Click it and Unblock the Notifications











