நான்கு ஹீரோயின்களுடன் நடிக்கும் நட்டி.. சைக்கோ த்ரில்லர் படமாம்.. தொடங்கியது படப்பிடிப்பு!
சென்னை: நடிகர் நட்டி நான்கு ஹீரோயின்களுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நட்ராஜ், நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நட்டி.
38 வயசாகிடுச்சு.. பிகினி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கத்ரீனா கைஃப்!
கடைசியாக அவரது நடிப்பில் கர்ணன் படம் வெளியானது.

போலீஸ் அதிகாரியாக
அப்படத்தில் கண்ணபிரான் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார் நட்ராஜ். ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக பட்டையை கிளப்பினார் நட்டி.

சைக்கோ த்ரில்லர்
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார் நட்டி என்கிற நடிகர் நட்ராஜ். சைக்கோ த்ரில்லர் படமான இப்படத்தை ஹாரூன் இயக்குகிறார். ட்ரீம் ஹவுஸ் சார்பில் விஎம் முனிவேலன் தயாரிக்கிறார்.

நேற்றே தொடங்கியது
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் ஆடி மாதம் தொடங்கியுள்ளதால் பல படங்களின் படப்பிடிப்பு நேற்றே தொடங்கிவிட்டது.

நான்கு ஹீரோயின்கள்
அந்த வகையில் நட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











