வெளிநாடு சென்று திரும்பிய விக்னேஷ் சிவன்.. உருகிய நயன்தாரா.. ட்ரெண்டாகும் போஸ்ட்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்தின் ஷூட்டிங் கடந்த பத்து நாட்களாக மலேசியாவில் நடைபெற்றது. இந்தச் சூழலில் ஷூட்டிங்கை முடித்து திரும்பிய விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா உருக்கத்துடன் போஸ்ட் போட்டிருக்கிறார்.

போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Nayanthara Put emotional Post for Vignesh Shivan in her instagram

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.

2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?


நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

எல்.ஐ.சி: விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

நடிகர் சேஷுவின் உடல் நல்லடக்கம்.. குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி!


வெளிநாட்டில் ஷூட்டிங்: இந்தியாவில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஷூட்டிங் அடுத்தக்கட்டமாக மலேசியாவில் நடைபெற்றது. இதற்காக விக்னேஷ் சிவன் மலேசியா சென்றிருந்தார். இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் அவர். விக்னேஷ் சிவன் திரும்பியதை அடுத்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விக்னேஷ் சிவனை ரொம்பவே மிஸ் பண்ணினேன் என உருக்கமாக தெரிவித்திருக்கிறார். விக்னேஷ் சிவனும் தனது மகன்கள் உயிர், உலக் ஆகியோரை வாஞ்சையோடு அணைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

முன்னதாக அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை மாற்ற சொல்லியது. ஆனால் அதை ஏற்க மறுத்த விக்னேஷ் சிவன் அந்தப் படத்திலிருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X