கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்

By Siva

Recommended Video

கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார், தாடி பாலாஜி மீது நித்யா புகார்

சென்னை: கணவர் தாடி பாலாஜி மீது நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் தாடி பாலாஜியும், நித்யாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தார்கள். பாலாஜியின் கொடுமையை தாங்க முடியவில்லை என்று கூறி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கமல் ஹாஸன் உள்ளிட்டோர் அறிவுரை வழங்கியதால் நித்யாவும், பாலாஜியும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.

நித்யா

நித்யா

மகள் போர்ஷிகாவுக்காக நித்யா தாடி பாலாஜியுடன் மீண்டும் சேர்ந்தார். இந்நிலையில் தாடி பாலாஜி மீண்டும் அடித்து துன்புறுத்துவதுடன், கேவலமாக பேசுவதாகக் கூறினார் நித்யா. இந்நிலையில் அவர்கள் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.

போலீஸ்

போலீஸ்

தாடி பாலாஜி மீது மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, பாலாஜி மீண்டும் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறார். கடந்த மாதம் 21ம் தேதி குடிபோதையில் வந்து என் வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கமல்

கமல்

கமல் சார் உள்ளிட்டோர் கூறியதால் இருவரும் சமரசம் ஆனோம். ஆனால் அவர் சேர்ந்து வாழத் துவங்கிய சில நாட்களிலேயே மீண்டும் குடித்துவிட்டு வந்து என்னையும், மகளையும் அடிப்பது, ரவுடிகள், நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் திட்டுவதுமாக இருந்தார் என்கிறார் நித்யா.

சண்டை

சண்டை

பெண்கள் இயக்கத்திற்கு நான் தலைவியாகியுள்ளது அவருக்கு பிடிக்கவில்லை. தலைவியாக இருக்க உனக்கு என்ன தகுதி உள்ளது என்றார். வாட்ஸ்ஆப்பில் அவரும், அவரின் நண்பர்களும் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள். அதனால் தான் போலீசில் புகார் அளித்தேன் என்று நித்யா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X