பாலாஜி மீது குப்பை கொட்டுற நீ: ஐஸ்வர்யாவை விளாசிய நித்யா
Recommended Video

சென்னை: ராணி மகாராணி டாஸ்கின்போது ஐஸ்வர்யா ஓவராக நடந்தது கொண்டதை கண்டித்துள்ளார் நித்யா.
பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா என்று நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் முன்னாள் போட்டியாளர்களை அழைத்து வந்து என்டர்டெயின் செய்கிறார் பிக் பாஸ்.
நேற்று ரம்யா, வைஷ்ணவி வந்தனர். இந்நிலையில் இன்று நித்யா, ஐஸ்வர்யாவின் தோழன் ஷாரிக் ஆகியோர் வந்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா
ராணி மகாராணி டாஸ்கின்போது தாடி பாலாஜி தலையில் குப்பையை கொட்டிய ஐஸ்வர்யாவை விளாசியுள்ளார் நித்யா. சக போட்டியாளர்கள் நினைத்திருந்தால் ஐஸ்வர்யாவை இழுத்து தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் பண்ணவில்லை என்று நித்யா பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்
ராணி மகாராணி டாஸ்கின்போது ஐஸ்வர்யா எப்படி பேய் மாதிரி நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் ஐஸ்வர்யாவை விட அவரை தடுக்காத ஹவுஸ்மேட்ஸ் மீது தான் அதிக கோபம் என்று நித்யா தெரிவித்துள்ளார். என்ன நித்யா, ஐஸ்வர்யாவுக்கு சாதகமாக பேச வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தாரா பிக் பாஸ்?

தடுக்கவில்லை
யாஷிகா நினைத்திருந்தால் ஐஸ்வர்யாவை தடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல் அவரை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தார். ஷாரிக் சொல்லியே கேட்காமல் குப்பையை கொட்டினார் ஐஸ்வர்யா. டாஸ்க் என்பதை மறந்து ஐஸ்வர்யா ஏதோ நிஜ ராணி போன்றே நடந்து கொண்டார். அவர் பக்கத்திலேயே யாராலும் செல்ல முடியவில்லை நித்யா.
ஷாரிக்
மும்தாஜ், மகத், ஷாரிக் ஆகியோர் ஐஸ்வர்யாவை தடுக்க முயன்றனர். ஆனால் குப்பையை கொட்டுமாறு பிக் பாஸ் தான் டாஸ்க் கொடுத்தாரோ என்று அவர்கள் குழம்பிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











