Nooru Sami Day 8 Box Office - நூறு சாமி 8வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை அப்படியே மாறுதே

சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, லிஜோமோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நூறு சாமி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. கைம்பெண்ணின் மறுமணத்தை வலியுறுத்தும் கதையை சசி தனது ஸ்டைலில் கூறியிருந்தார். அது மக்களிடம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனதால்; நூறு சாமி திரைப்படமும் வசூலிலும் நிலையான இடத்தை நோக்கி நகர்ந்துவருகிறது.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் சசி. முதல் படமான சொல்லாமலே அடுத்த படமான ரோஜா கூட்டம் ஆகியவைகளுக்கு பிறகு அவர் இயக்கும் பெரும்பாலான படங்கள் ஏதேனும் ஒரு நல்ல கருத்தை வலுவாக பேசியிருக்கிறது. மேலும் தன்னுடைய படங்களில் சென்ட்டிமென்ட்டை ரசிகர்களை கவரும்படி கையாள்வதில் அவர் தனித்துவமானவர். இப்போது அவர் விஜய் ஆண்டனி, சுவாசிகா உள்ளிட்டோரை வைத்து நூறு சாமி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Nooru Sami Box Office Collectin Day 8 - Vijay Antony s Film Crosses Rs 7 60 Crore
Photo Credit:

என்ன கதை?: தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வளர்ந்த மகன்கள் தங்களுடைய தாய்க்கு மறுமணம் செய்து வைத்தார்கள். அந்த முற்போக்கான விஷயம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதையையும், திரைக்கதையையும் அமைத்திருக்கிறார் சசி. பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கியமான ரோலையும் ஏற்றிருக்கிறார்கள்.

Also Read
ஒரே கலர்.. ஒரே டிரெண்ட்.. த்ரிஷா சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்! குஷ்பு மகள் திருமணத்தில் செம ஸ்டைல் கச்சேரி
ஒரே கலர்.. ஒரே டிரெண்ட்.. த்ரிஷா சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்! குஷ்பு மகள் திருமணத்தில் செம ஸ்டைல் கச்சேரி

படத்துக்கு வரவேற்பு: சசியின் படங்கள் என்றாலே திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும் ஒரு ஆவல் இருக்கும். அவரும் அப்படி ஆவலோடு வருபவர்களை பெரும்பாலும் ஏமாற்றியதில்லை. அதேபோல்தான் நூறு சாமி திரைப்படத்துக்கும் நிகழ்ந்திருக்கிறது. முதலில் ரிலீஸுக்கு முன்னதாக படம் பார்த்த பல பிரபலங்கள் சசியையும் இந்தப் படத்தையும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடின்னார்கள். ரிலீஸுக்கு பிறகு மக்களிடமும் அதே ரெஸ்பான்ஸ் கிடைக்குமா என எதிர்பார்ப்பும் இருந்தது.

மக்களும் கைவிடவில்லை: எதிர்பார்த்தபடியே மக்களும் இந்தப் படத்தை கை விடவில்லை. பலரும் ஒருமுறை படத்தை பார்த்துவிட்டு அடுத்த முறை தங்களது குடும்பத்தை அழைத்து வந்து படம் பார்க்கிறார்கள். பெண்களுக்கு தேவையான கருத்தை பேசியிருப்பதால்; பெண்களும் படையெடுத்துவருகிறார்கள். இதன் காரணமாக படக்குழுவும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

வசூல் விவரம்: அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, படம் வெளியாகி ஒரு வாரத்தில் 6.85 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. தற்போது எட்டாவது நாள் வசூலில் படம் ஓரளவுக்கு டீசன்ட்டான வரவேற்பை பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அப்படம் நேற்று 97 லட்சம் ரூபாய்வரை வசூலித்ததாம். ஏழாவது நாள் வசூலைவிடவும் நேற்றைய வசூல் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் எட்டு நாட்களில் அந்தப் படம் 7.60 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இன்னும் பாசிட்டிவ் பேச்சுக்கள் படத்தை சுற்றி இருப்பதாலும் நேற்றிலிருந்து நாளை வரை விடுமுறை என்பதாலும் கண்டிப்பாக மேற்கொண்டு வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X