Nooru Sami Day 3 Box Office - நூறு சாமி 3வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் நம்பர் சட்டுனு கூடிருச்சு
சென்னை: விஜய் ஆண்டனி, சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நூறு சாமி திரைப்படத்தை சசி இயக்கியிருக்கிறார். அவரது இயக்கம் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். அது இந்தப் படத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரிலீஸாகி மூன்றாவது நாளான நேற்று அப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி; நடிகராகவும் ஜொலித்துவருகிறார். ஏகப்பட்ட படங்களில் நடித்தாலும் நான், சலீம், பிச்சைக்காரன், சக்தி திருமகன் என சில படங்கள் மட்டுமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தன. நல்ல வெற்றியையும் பெற்றன. அவற்றில் பிச்சைக்காரன் திரைப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்போது மீண்டும் சசியும், விஜய் ஆண்டனியும் நூறு சாமி திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். சுவாசிகா முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.

என்ன கதை?: இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. அதாவது, கணவனை இழந்து பிள்ளைகளை கொண்டிருக்கும் கைம்பெண்; மறுமணம் செய்வதை வலியுறுத்தி இந்தப் படம் பேசுகிறது. உலகத்தில் எவ்வளவு மாறினாலும் பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில் இன்னும் பல விஷயங்கள் மாறாமலேயே இருக்கின்றன. அவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள் இந்தப் படத்தில்.
எப்படி இருக்கிறது படம்?: இந்தப் படமும் வழக்கமான சசி படம் போன்றே பார்ப்பவர்களை பல காட்சிகளில் கலங்க வைத்திருக்கிறது. படம் பார்த்த பலரும் இதே மாதிரி கதை தங்கள் தோழிகளின் வாழ்க்கையிலும் இருக்கிறது. அவர்களை எல்லாம் அழைத்து வந்து இந்தப் படத்தை பார்க்க செய்ய வேண்டும் என்று கூறினார்கள். குடும்ப ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு வலுவான பாராட்டுக்கள் கிடைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாசிகாதான் கெத்து: இப்படத்தின் பெரிய பலமாக திகழ்பவர் சுவாசிகாதான். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அட்டகாசமாக நடித்திருந்தார். படம் பார்த்த அத்தனை பேருமே கண்டிப்பாக சுவாசிகாவுக்கு இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கருத்தைத்தான் சொல்லிவருகிறார்கள். இப்படி விமர்சன ரீதியாக படம் சூப்பர் வரவேற்பை பெற்றுவிட்டது.
வசூலிலும் சூப்பர்: இந்நிலையில் அப்படத்தின் வசூல் நிலவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் 75 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்த நூறு சாமி; இரண்டாவது நாளில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை கலெக்ட் செய்தது. படத்துக்கு பலரிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி மூன்றாவது நாளான நேற்று 1,072 ஷோக்கள் திரையிடப்பட்டு; ஒரு கோடியே 73 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தம் அந்தப் படம் மூன்று நாட்களில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications
