நல்லவேளை நான் பயந்தது போல நடக்கல: நடிகர் நாசர்

சென்னை: இருமுகன் படம் போல் இல்லாமல் நோட்டா படத்தில் சத்தமாக பேசி நடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் நாசர்.

ஸ்டுடியோ கிரீன் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நோட்டா.' தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

[ சாதித்திமிருக்கு சாட்டையடி கொடுக்கும் 'பரியேறும் பெருமாள்'! விமர்சனம் ]

அழுத்தமான கேரக்டர்:

அழுத்தமான கேரக்டர்:

அப்போது பேசிய நடிகர் நாசர், "ரொம்பநாள் கழித்து ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன். நடிப்பு என்கிற விஷயத்தை சுவைக்கின்ற படமாக இது இருக்கும்.

பயம்:

பயம்:

இருமுகன் படத்தில் என்னை ரொம்ப மெதுவாக வசனங்களை பேச சொன்னார்.. ஆனால் இந்தப்படத்திலும் அப்படி ஏதாவது சொல்வாரோ என பயந்தேன்.. ஆனால் நான் நினைத்து வைத்தது போலவே இந்தப்படத்தில் பேச சொல்லிவிட்டார்.

ஆச்சர்யம்:

ஆச்சர்யம்:

இது அரசியல் படம் என்பதால் இதில் நாங்கள் அவ்வப்போது ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும்போதும் வெளியில் அதேபோல நிகழ்வு நடந்திருக்கும் என்பதுதான் எங்களுக்கு ஆச்சர்யம் தந்தது" என்றார்.

விஜய்:

விஜய்:

இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ்,சன்சனா மற்றும் பிக்பாஸ் யாஷிகா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X