பராசக்தி எதிர்பார்த்த வசூல் இல்லை.. மனம் திறந்த தயாரிப்பாளர்.. அதுதான் முக்கிய காரணமாம்

சென்னை: சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும், அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அமரன் வெற்றிக்கு பிறகு உச்சக்கட்டத்துக்கு சென்றது. அப்படித்தான் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்த பராசக்தி படத்துக்கும் இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் அதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் திரைத்துறைக்குள் வந்தபோது; பத்து படங்கள்தான் இவர் தாங்குவார் என்றெல்லாம் சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் அவரோ 25 படங்கள்வரை வந்துவிட்டார். அவரது கரியரிலேயே அமரன் திரைப்படத்துக்கு தனி இடம் உண்டு. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. எஸ்கேவின் மார்க்கெட்டும் உச்சம் செல்ல உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Parasakthi Producer Aakash Bhaskaran Explains Why Sivakarthikeyan s Film Failed at the Box Office
Photo Credit:

பராசக்திக்கு ஹைப்: மார்க்கெட் உச்சம் சென்றது மட்டுமின்றி அவரது அடுத்தடுத்த படங்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. அப்படி அவர் நடித்த மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் பராசக்தி விண்ணளவு எதிர்பார்ப்பு இருந்தது. தேசிய விருது வென்ற சுதா கொங்கரா இயக்கத்தில் முதன்முறையாக எஸ்கே நடித்தது, ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு மாணவர்கள் 60களில் செய்த போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது என ஹைப் விண்ணளவு இருந்தது. ஆனால் படம் தோல்வியைத்தான் சந்தித்தது.

Also Read
ரூமுக்காக சண்டை போட்ட ரன்வீர் சிங்.. கூலாக ஹேண்டில் செய்த அஜித்.. ஏகே ரூட்டே தனிதான்
ரூமுக்காக சண்டை போட்ட ரன்வீர் சிங்.. கூலாக ஹேண்டில் செய்த அஜித்.. ஏகே ரூட்டே தனிதான்

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்: கதைக்களம் ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமானது என்பதால்; நிச்சயம் பெரிய மைல் கல்லாக பராசக்தி அமையும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் சுதா படம் இயக்கிய முறையோ ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்தது போல் இருந்தது. எனவே படத்தை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். இது ஒருபக்கம் இருக்க தயாரிப்பாளர் தனக்கு முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என நீதிமன்றம்வரை சென்றார் இயக்குநர் சுதா. இந்நிலையில் பராசக்தி குறித்து அதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியிருக்கிறார்.

Recommended For You
கடவுள் கொடுத்த வரம்.. மனிதராக வாழக்கூடிய ஒரு சித்தர்.. கணவரை ஒரேயடியா புகழ்ந்த நீலிமா ராணி!
கடவுள் கொடுத்த வரம்.. மனிதராக வாழக்கூடிய ஒரு சித்தர்.. கணவரை ஒரேயடியா புகழ்ந்த நீலிமா ராணி!

ஆகாஷ் பேட்டி: அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பராசக்தி படத்டஹி சுற்றி ஏற்பட்ட சர்ச்சைகள், மற்ற படங்களுடனான மோதல், சென்சார் பிரச்னைகள் மற்றும் பெரிய எதிர்பார்ப்புகள் ஆகியவையே அதன் நிலைக்கு முக்கிய காரணம். பராசக்தி மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு படங்களையும் லாப பகிர்வு முறையில்தான் தயாரித்டோம். பராசக்தி படம் பெரிய பட்ஜெட். அடனுடன் ஒப்பிடும்போது வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

அதனால்தான் அப்படி: எனவேதான் ஒத்துக்கொண்டபடி லாப பகிர்வை முழுமையாக வழங்க முடியவில்லை. ஆனால் இட்லி கடை படத்தின் பட்ஜெட் குறைவு. அது எங்களுக்கு லாபகரமான முயற்சியாக அமைந்தது. எனவே தனுஷ் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி முழு லாப பகிர்வையும் வழங்கினோம்" என்றார். இவர்தான் சமீபத்தில் வெளியான இதயம் முரளி திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X