பாக்யராஜ் இறப்பு..மயானத்தில் வைத்து பார்த்திபன் சொன்னது.. சாந்தனு மீது விழும் அழுத்தம்

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் மறைந்தது இயக்குநர் பார்த்திபனை ரொம்பவே நோகடித்திருக்கிறது. இந்நிலையில் பாக்யராஜ் குறித்து தனது மனதின் ஆழத்திலிருந்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான பாக்யராஜ் ஆரோக்கியமாகவே இருந்தார். குஷ்புவின் மகள் அவந்திகா திருமணத்துக்குக்கூட கோவாவரை சென்று வந்தாரே. அங்கிருந்து வந்த பிறகும் காலையில் வழக்கம்போல் நடைபயிற்சியும் மேற்கொண்டார். அதை முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்தபோது மாரடைப்பு ஏற்பட; மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தாலும் உயிர் பிரிந்துவிட்டது. அவருக்கு வயது 73.

Parthiban s Emotional Tribute to K Bhagyaraj Sparks Debate Over Shanthanu Remark
Photo Credit:

பார்த்திபன் நிலைமை: பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது உயிரிழப்பு குடும்பத்தினரை போலவே பார்த்திபனையும் ரொம்பவே பாதித்திருக்கிறது. அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ் என்று எழுதப்பட்ட தாளினை அட்டையில் வைத்து துக்க வீட்டின் முகப்பில் மாட்டியிருந்தார். அது அனைவரையும் கலங்க செய்தது. தகனம் செய்யப்பட்ட பிறகு பாக்யராஜ் குறித்து உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் அவர்.

Also Read
1999லேயே ஏஐயா.. அதுவும் தமிழ் சீரியலில்.. இயக்குநர் செம தீர்க்கதரிசி ப்பா!
1999லேயே ஏஐயா.. அதுவும் தமிழ் சீரியலில்.. இயக்குநர் செம தீர்க்கதரிசி ப்பா!

பார்த்திபன் பதிவு: அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கடைசி வரை யாரோ? பாடிய கண்ணதாசனுக்கே காடு வரை தானே? பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார். இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை ....

சூரியனுடன் கிளம்பி: எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில், 'அன்புடன் உங்கள் பாக்யராஜ்' கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில் நான் வைத்தது 'கடைசிவரை' சென்றது. கால்மாட்டில் தீபம், நெஞ்சில் கற்பூரம் ஏற்றிய பின் அந்தத் தீக்குகை நோக்கிப் பயணம் ஆயுத்தமானது. ஒரு சக முயற்சியாளராக அறிமுகமான பாக்யராஜை குருவாக ஏற்றுக்கொண்டபின், அடிபணிந்தே பணிப்புரிந்தேன். தூக்கத்தை பட்டிளி போட்டே பழக்கப்பட்டவனாதலால் சூரியனுடனே கிளம்பி ஆபிஸுக்கு சென்று விடுவேன்.

தயாரிப்பாளரிடம் சொன்னேன்: பாக்யராஜ் சாரின் அறையை சுத்தப்படுத்தி அவர் அமரும் இடத்தில் Pad paper pen -ஐ தயார் நிலையில் வைப்பேன். இப்போதும் அந்த P P P அவரது இதயத்திற்குப் பக்கத்தில் வைத்திருக்கிறேன். அது நகர்ந்து அந்த தீப்பிழம்புக்குள்.... அஸ்தி பெற காத்திருக்கும் சாந்தனு பக்கத்தில் ஆறுதல் சொல்ல வந்தமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவியிடம் " அப்போது நீங்கள் செய்தது (ராவணக்கோட்டம் தயாரித்தது)பத்தாது, இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்" என்றேன்.

சரியா? தவறா?: அந்த இடத்தில் அதைப் பேசுவது சரியா தவறா என்ற யோசனையை மீறி. பாக்யராஜ் சாருக்கு நன்றி கடனாக சாந்தனுவை வைத்து 'கோடிட்ட இடங்களை நிரப்புக' எடுத்தவன் நான். மீண்டும் சாந்தனு வெற்றி பெற வேண்டுகிறேன் திறமையை மீறி வெற்றி மட்டுமே இங்கு கொண்டாடப்படும் !பூத உடல் சாம்பலானாலும் புகழுடல் நிலைக்கப் போகும் பாக்யராஜ் சார் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் 'மயான கொள்ளை' என அவரது இன்றைய உதவியாளர் கூறினார்.

What an irony? (Irony is a contrast between expectation and reality. It occurs when the literal meaning of words or the outcome of an event is the exact opposite of what is naturally expected, creating a surprising, humorous, or sometimes tragic effect.) Google வழி சொல்லாத இடத்திற்கு சென்று விட்ட குருவின் அஸ்தியை பெஸன்ட் நகர் கடலில் கரைத்துவிட்டு நினைவை மட்டும் சுமந்தபடி" என குறிப்பிட்டிருக்கிறார்

பார்த்திபனின் இந்தப் பதிவு அவரது உணர்வுகளை வெளிப்படுத்தினாலும்; ஏற்கனவே தன் மகனால் வெல்ல முடியவில்லை என்ற கவலையில் பாக்யராஜ் போயிருப்பதாக சாந்தனு நினைக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் சாந்தனுவின் வெற்றி குறித்தும் அவரது கரியர் குறித்தும் இந்த நேரத்தில் பேசுவது மேற்கொண்டு அவருக்கு சங்கடமான மனநிலையையும், அதில் பெரிய அழுத்தத்தையும் கொடுக்கும் என்றே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X