நம்ம பெப்சி உமாவா இவங்க.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க பாஸ்.. ஆளே மாறிட்டாங்களே ப்பா!

சென்னை: தமிழ் சின்னத்திரை உலகத்தில் தவிர்க்க முடியாதவர் பெப்ஸி உமா. பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் வெகு பிரபலமானவர். அதன் காரணமாக சினிமா வாய்ப்புகளும் வந்தன. அத்தனையையும் மறுத்துவிட்டார். ஒருகட்டத்தில் அனைத்திலிருந்தும் ஒதுங்கி திருமணமாகி செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இப்போது எக்கச்சக்க பேர் வந்துவிட்டார்கள். இருப்பினும் பெப்ஸி உமாவுக்கு இருந்த கிரேஸ் வேறு யாருக்கும் இல்லை என்பதுதான் உண்மை. எம்பிஏ படித்திருக்கும் அவர் வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி அதிரிபுதிரி ஹிட்டடிக்க உமா மகேஸ்வரி பெப்ஸி உமாவாக மாறினார்.

Pepsi Uma s Latest Photos Go Viral Former Tamil TV Icon Looks Unrecognizble
Photo Credit:

செம ஹிட் நிகழ்ச்சி: இப்போதெல்லாம் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சி 100 எபிசோடுகள் தாண்டுவதே அதிசயம்தான். ஆனால் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 15 வருடங்கள் ஒளிபரப்பானது. அதற்கு முழு முதல் காரணம் பெப்ஸி உமா மட்டுமே. தனது குரலாலும், அழகாலும் அத்தனை பேரையும் கட்டி போட்டு வைத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Also Read
விஜய்யின் அந்த ஆக்‌ஷன்.. கொண்டாட்டத்தில் தவெக.. இந்த ரசிகை சொல்றதை கேளுங்க
விஜய்யின் அந்த ஆக்‌ஷன்.. கொண்டாட்டத்தில் தவெக.. இந்த ரசிகை சொல்றதை கேளுங்க

சரியான மவுசு: தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு கோயில் கட்டப்பட்டது. அவர் ஒரு வெள்ளித்திரை நடிகை. ஆனால் சின்னத்திரை தொகுப்பாளினியான உமாவுக்கும் அதே மவுசு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தன் விரலையே வெட்டி பரிசாக கொடுத்த ரசிகரும் உமாவுக்கு இருந்தார்கள். அதையெல்லாம் அவர் கொஞ்சம்கூட ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை.

சினிமா வாய்ப்பு: சின்னத்திரையில் அவருக்கு இருந்த கிரேஸை பார்த்து சினிமாவில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு வந்தது. ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் எல்லாம் தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் உமா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் திருமணம் செய்துகொண்டு செட்டிலும் ஆகிவிட்டார். திருமணம் ஆன கையோடு குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார் அவர்.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போன அவர்; சில வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்கு பிறகு மீண்டும் காணாமல் போய்விட்டார். இந்நிலையி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. அதில் உமா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயிருக்கிறார். அதேநேரம் அந்த நெற்றி பொட்டும், சிரிப்பும், குண்டு விழிகளும் இன்னமும் ஆளை ஈர்க்கும் வகையிலேயே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X