ஆதிபுருஷ் ஹீரோயின் உடன் காதலில் விழுந்தாரா பிரபாஸ்.. டேட்டிங் என டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: இந்திய சினிமாவின் டார்லிங்காகவே மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ் படம் வெளியாகிறது.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் உடன் நடிகர் பிரபாஸ் டேட்டிங் என பாலிவுட்டில் நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டு வருகின்றனர்.

அதற்கான காரணம் இதுதான் என சமீபத்தில் கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடந்த அந்த தரமான சம்பவத்தை ஷேர் செய்துள்ளனர்.

2009 -2013 விருதுகள் பெற்ற சீரியல்கள் ஒருபார்வை.. எந்தெந்த சீரியல்கள் டாப் தெரியுமா?'

பிரம்மாண்ட பட்ஜெட் ஹீரோ

பிரம்மாண்ட பட்ஜெட் ஹீரோ

பாகுபலி படத்திற்கு பிறகு 200 கோடிக்கும் கம்மியான பட்ஜெட்டில் நடிக்க மாட்டேன் என்கிற அளவுக்கு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் உயர்ந்து விட்டது. ஆனால், அதன் பின்னர் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட மெகா பர்னிச்சர்கள் டிசாஸ்டராக நொறுங்கின. ஆனாலும், பிரபாஸ் கைவசம் ஆதிபுருஷ், சலார், பிராஜெக்ட் கே என அதை விட பெரிய பட்ஜெட் படங்கள் உள்ள நிலையில், எப்படி இருந்தாலும் மீண்டும் தனது நம்பர் ஒன் இடத்தை அவர் பிடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமராக பிரபாஸ்

ராமராக பிரபாஸ்

தான்ஹாஜி படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், க்ரித்தி சனோன் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகின்றனர். ராமாயண இதிகாசத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த அப்டத்தில் ராமராக நடிகர் பிரபாஸ் விரைவில் காட்சி தர உள்ளார்.

காதலில் விழுந்தாரா பிரபாஸ்

காதலில் விழுந்தாரா பிரபாஸ்

இந்நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் உடன் நடிகர் பிரபாஸ் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளம்பி உள்ளது. நெட்டிசன்களும் இவர்கள் இருவரும் ரியல் லைஃப்பிலும் ஜோடி சேர்ந்தால் சூப்பராக இருக்கும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

கரண் ஜோஹரின் காபி வித் கரண் சீசன் 7ன் ஒவ்வொரு எபிசோடும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும் பரபரப்பையும் கிளப்பி வருகிறது. அதன் லேட்டஸ்ட் எபிசோடில் கலந்து கொண்ட நடிகை க்ரித்தி சனோனுக்கு நிகழ்ச்சியின் நடுவே நடிகர் பிரபாஸ் போன் செய்து பேசியது தான் தற்போது இப்படியொரு காதல் வதந்தி கிளம்ப காரணமாக அமைந்துள்ளது.

முன்னதாக அனுஷ்கா

முன்னதாக அனுஷ்கா

பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்து வந்த சமயத்தில் நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவரும் நண்பர்கள் தான் என பின்னர் வெளிப்படையாக அறிவித்தனர். இந்நிலையில், பிரபாஸ் - கீர்த்தி சனோன் டேட்டிங் செய்து வருவதாக கிளம்பியுள்ள தகவல் எந்த அளவுக்கு உண்மை? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தால் தான் உண்டு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X