பிரேம்ஜியை செமத்தியாக வேலை வாங்கும் மாமியார்.. மனுஷன் கில்லாடி.. அதிலும் டிமிக்கிதான்

சென்னை: நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல முகங்களை கொண்டிருக்கும் பிரேம்ஜி அமரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. குடும்பம், குழந்தை என பொறுப்போடு இருக்கிறார் பிரேம். இந்நிலையில் அவர் மற்றும் அவரது மாமியார் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் பார்வையில் பட்டு வைரலாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது சகோதரர் பிரேம்ஜியும் திரைத்துறையி பிஸியாக வலம் வருகிறார். சில வருடஙக்ளுக்கு முன்புவரை கோலிவுட்டில் சிங்கிள்களுக்கான அகராதியில் முதல் பக்கத்தில் பிரேம்ஜிதான் இடம்பெற்றிருந்தார். தான் அணிந்த டீ ஷர்ட்டுகளில் எல்லாம் சிங்கிள் தொடர்பான வாசகங்கள் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டார். வாரம் முழுவதும் டியூட்டி, வார இறுதியில் பார்ட்டி என்று வாழ்க்கையை கழித்துக்கொண்டிருந்த அவருக்கு; காதல் மலர்ந்தது.

Premgi Amaren Recreates Classic Comedy Scene With Mother-in-Law Viral Video Wins Hearts
Photo Credit:

நிம்மதியடைந்த வீட்டினர்: இந்து என்ற பெண்ணுடன் சோஷியல் மீடியாவில் பழக்கமாகி காதலிக்க தொடங்கினார். அதை பார்த்து நிம்மதியடைந்த வீட்டார் உடனடியாக திருமண ஏற்பாடுகளை செய்தார்கள். திருத்தணியில் வைத்து நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார் வெங்கட் பிரபு. சிம்ப்பிளாக நடந்த திருமணத்தில் திரைத்துறையிலிருந்து ஜெய், வைபவ், டிடி, சங்கீதா உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

Also Read
அவரை கேட்டதா சொல்லுங்க.. சிரித்து மழுப்பிய டாப் நடிகை.. அந்தர் பல்டி அடித்த பிரபலம்.. கைமாறிய பணம்!
அவரை கேட்டதா சொல்லுங்க.. சிரித்து மழுப்பிய டாப் நடிகை.. அந்தர் பல்டி அடித்த பிரபலம்.. கைமாறிய பணம்!

பிரேம்ஜிக்கு வந்த சூப்பர் பொறுப்பு: திருமணமாகி முழு குடும்பஸ்தனாக மாறிய அவர்; பார்ட்டிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு வேலை விட்டால் வீடு; வீடு விட்டால் வேலை என்று இருக்கிறார். அவருக்குள் வந்த மாற்றத்தை பார்த்து அனைவருமே ஸ்தம்பித்து போனார்கள். அதேசமயம் வாழ்நாள் முழுமைக்குமான பார்ட்டியை அவர் பேச்சிலராக இருந்தபோதே செய்துவிட்டார்; எனவே இப்போது வீட்டில் இருப்பது ஒன்றும் தவறு இல்லை என்கிற தொனியில் வெங்கட் ஜாலியாக கலாய்ப்பதையும் பார்க்க முடிகிறது.

Recommended For You
ஜன நாயகன் பார்க்கிறதுக்கு முன்னாடி பகவந்த் கேசரி படத்தோட கதையை தெரிஞ்சிக்கலாம்.. வாங்க!
ஜன நாயகன் பார்க்கிறதுக்கு முன்னாடி பகவந்த் கேசரி படத்தோட கதையை தெரிஞ்சிக்கலாம்.. வாங்க!

அப்பாவான பிரேம்ஜி: ஏற்கனவே திருமணமாகி பொறுப்பு கூடிய அவருக்கு; மேற்கொண்டு பொறுப்பு வரும்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்தது. அதாவது, அவருக்கும், இந்துவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இறந்து போன தன்னுடைய தாய்தான் இந்தக் குழந்தை மூலம் மீண்டும் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று அவரும்,வெங்கட் பிரபுவும் ஆணித்தரமாக நம்புகிறார்களாம். கங்கை அமரனும் தன் பேத்தி என்றால் கொள்ளை பிரியத்தோடு இருப்பதாக அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இதற்கிடையே பிரேம்ஜியின் மாமியார், 'பிரேம்ஜி மாமியார் மசாலா' என்ற பெயரில் தொழிலையும் நடத்திவருகிறார். அதற்கான ப்ரோமோ வீடியோவில், பிரேமை பார்த்து அவர், 'மொட்டை மாடியில் மிளகாயை காய வைக்க சொன்னேனே செஞ்சீங்களா என கேட்க; அப்போதானே கீரையை உருவ சொன்னீங்க என பிரேம் சொல்கிறார்.

அதற்கு உடனே மாமியாரோ அதை செய்தீர்களா, இதை செய்தீர்களா என தொடர்ந்து கேட்க; எதையுமே செய்யாத பிரேம்ஜி; அதான் இங்கே கூப்பிட்டீர்களே என கூறும்படி ஃபன்னாக அந்த வீடியோ செல்கிறது. லேசா லேசா படத்தில் மறைந்த மலையாள நடிகர் சீனிவாசன் செய்திருந்த ஃபேமஸான காமெடி சீன் இது. அதை இப்போது இரண்டு பேரும் அழகாக ரீ க்ரியேட் செய்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X