பிரியங்காவுக்கு ஆரம்பத்துல இருந்தே அபிஷேக்க பிடிக்கல.. 3வது புரமோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 4நாளுக்கான மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
முதல் புரமோவில் நமிதா மாரிமுத்து தன் சோக கதையை சொல்லி அழுத நிலையில், இரண்டா சிவகார்த்திகேயனை காப்பி அடிக்கும் ராஜு ஜெயமோகன்... வச்சு செய்யும் நெட்டிசன்கள்
இந்நிலையில், இன்னைக்கு சண்டை இல்லையா என ரசிகர்கள் கேட்பதை அறிந்து கொண்ட எடிட்டர் மூன்றாவது புரமோவில் சண்டை காட்சியை உள்ளே நுழைத்து கொடுத்து இருக்கிறார்.

அழுக்கு பாத்திரம்
டீ குடிச்ச அழுக்கு டம்ப்ளர்கள் மற்றும் அழுக்கு பாத்திரங்களை கண்ட இடங்களில் போடக் கூடாது என்றும் அப்படி போட்டால் இனி பாத்திரம் கழுவும் டீம் அதை சுத்தம் செய்ய மாட்டார்கள் என்றும் நமிதா மாரிமுத்து சொல்ல அதற்கு கவுன்ட்டர் கொடுத்த அபிஷேக்கை பார்த்து, அவன் தான் அந்த வேலையை செஞ்சிருப்பான் என பிரியங்கா கோல் அடிக்கும் சண்டை புரமோ களைகட்டி வருகிறது.

கண்ணீர் வரவைத்த புரமோ
இன்றைய முதல் புரமோவில் நமிதா மாரிமுத்து திருநங்கையாக மாறியதை ஏற்றுக் கொள்ளாமல் அவரது பெற்றோர் அவரை போட்டு அடி அடியென அடித்து துன்புறுத்திய கதையை கூறி அழ, ஒட்டுமொத்த ரசிகர்களும் நமிதா போன்ற ஏராளமான திருநங்கைகள் வாழ்வில் படும் துயரத்தை எண்ணி சோகமடைந்தனர்.

பைத்தியக்காரனா
பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவே அபிஷேக்கை லூசுப் பையன் என கலாய்த்த நிலையில், பிக் பாஸ் ரசிகர்களும் அபிஷேக்கை பைத்தியக்காரன் என்றே கலாய்த்து வருகின்றனர். "#Abishek இவன் பைத்தியக்காரண என்ன? சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுற மாதிரி எனக்கு தான் தெரியுதா" என இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார்.

நகைச்சுவை தென்றலா இவன்
பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜாவை நேரடியாக பைத்தியக்காரன் என கலாய்க்காமல், வடிவேலுவின் வேற லெவல் காமெடி மீமை போட்டு, "நகைச்சுவை தென்றலா இவன்" என இந்த நெட்டிசன் பங்கமாக கலாய்த்துள்ளார். இப்படி டீசன்ட்டா கலாய்ப்பதும் நல்லா தான் இருக்கு என பலரும் லைக் போட்டு வருகின்றனர்.

குறும்படம் போடுங்க
அபிஷேக் ராஜா தனது டீ கிளாஸை எங்கேயும் வைத்தது இல்லை என்றும் மற்றவர்களின் எச்சில் கோப்பைகளை எடுத்து பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டதாகவும் புரமோவில் சொன்னதை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவுக்கு ஒரு குறும்படம் போடுங்க பிக் பாஸ் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வாரம் கமலிடம் வசமாக அபிஷேக் ராஜா வறுபடுவார் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

பிரியங்காவுக்கு பிடிக்கல
பிரியங்காவுக்கு ஆரம்பத்துல இருந்தே இந்த க்ரிஞ்ச் அபிஷேக்க பிடிக்கல.. சீக்கிரமே பிரியங்காவுக்கும் அபிஷேக் ராஜாவுக்கும் வாய் சண்டை நடக்கும் என பல நெட்டிசன்களும் சாபம் விடாத குறையாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், முதல் வாரத்திலேயே அபிஷேக் ராஜாவை எலிமினேட் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











