“மைண்ட் புளோயிங்.. சூப்பரோ சூப்பர்.. மாஸ்டர் பீஸ்”.. #2.0 டிவிட்டர் விமர்சனம்!
ரஜினியின் 2.0 திரைப்படம் மிக அற்புதமாக இருக்கிறது என ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: ரஜினியின் 2.0 திரைப்படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர், போஸ்டர் போன்றவற்றின் மூலம் ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
இதனால், இப்படம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை, டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பலர் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
[#2.0... ரஜினி, ஷங்கர், அக்ஷய்குமார்... ஆர்வத்தை தூண்டும் ஐந்து விஷயங்கள்! ]
சூப்பரோ சூப்பர்:
படம் குறித்து பதிவிட்டுள்ள ஹம்சா புத்தா," ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மைண்ட் புளோயிங். வியக்க வைக்கும் விஎப்எக்ஸ் காட்சிகள். சூப்பரான ஆக்ஷன் காட்சிகள். சீட்டின் நுனியில் தான் நீங்கள் இருப்பீர்கள். நிச்சயமாக இது உங்கள் மனதை கவரும். இந்த படம் மிகச்சிறப்பாக இருக்கிறது. நல்ல வசூல் செய்யும். நிச்சயமாக பணம் வீணாகாது" என குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்டர் பீஸ்:
தரண் ஆதர்ஷ் எனும் இவர், "இது வரை இல்லாத பிளாக் பஸ்டர் படம். உண்மையிலேயே தனித்துவமான படம். இது ஒரு மாஸ்டர் பீஸ்", என புகழ்ந்துள்ளார்.
மகளின் பாராட்டு:
ரஜினியின் மகள் சவுந்தர்யா,"2.0 இந்த உலகத்துக்கு வெளியே இருக்கிறது", என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். மேலும் இரண்டு கைகளை உயர்த்தி தட்டுவது போன்ற எமோட்டிகான்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இவர் சொல்வதைப் பாருங்கள்:
இந்த ரசிகர் 2.0 படத்தைப் பார்த்துக் கொண்டே தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படி பதிவிட்டுள்ளார், "என்ன ஒரு உணர்வுப்பூர்வமான படம். நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் அழுவார்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











