பாவா லட்சுமணனுக்கு மாதா மாதம் ரஜினி கொடுக்கும் தொகை.. சூப்பர் ஸ்டார் மனசே மனசுதான்
சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே நடிகராக மாறியவர் பாவா லட்சுமணன். வடிவேலு உள்ளிட்டோருடன் சேர்ந்து பல காமெடி காட்சிகளில் கலக்கிய அவருக்கு; சில வருடங்கள் முன்பு சர்க்கரை நோயால் கால் விரல்கள் எடுக்கப்பட்டன. அதற்கு பிறகும் தொடர்ந்து கஷ்டப்பட்ட அவருக்கு; சமீபத்தில்தான் அமைச்சர் ராஜ்மோகன் மூலம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவதற்கு இடம் கொடுக்கப்பட்டது.
வைகை புயல் வடிவேலுவுக்கென்று தனி டீம் இருந்தது. அந்த டீமில் அல்வா வாசு, சிங்கமுத்து, பாவா லட்சுமணன், போண்டா மணி என பலர் இருப்பார்கள். இவர்களில் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுவுக்கும் பிரச்னை வந்துவிட்டது. அல்வா வாசு, போண்டா மணி உள்ளிட்டோர் எல்லாம் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார்கள். பாவா லட்சுமணனும் முன்னர் போல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை.

யார் இந்த பாவா லட்சுமணன்: சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தி பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்த நிறுவனத்தின் மூலம்தான் நடிக்கவும் தொடங்கினார். வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர். மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் காட்சியில் பெண்ணின் தந்தையாக, 'வா மா மின்னலு' என்ற வசனத்தின் மூலம் வெகு பிரபலமடைந்தார் பாவா லட்சுமணன். அதேபோல் ஏய் உள்ளிட்ட பல படங்களிலும் வடிவேலுவுடன் அவர் செய்த காமெடி காட்சிகளும் பிரபலமாகின.
ஆனந்தத்தில் கலக்கிய பாவா: வடிவேலுவுடன் இணைந்து நடித்து மட்டும் பாவா லட்சுமணன் பிரபலமாகவில்லை. லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் அரிசி நீ என்னை தினமும் தரிசி; பருப்பு என் மேல காட்டாத வெறுப்பு என கவிதை சொல்லும் காட்சியின் மூலமும் அனைவரிடமும் பிரபலமடைந்தார். இன்றுவரை அந்தக் கவிதை ஃபேமஸ். மேலும் அதே படத்தில் காமெடி ரோல் மட்டுமின்றி அழுத்தமான எமோஷனலான நடிப்பையும் வெளிப்படுத்தியிருதது குறிப்பிடத்தக்கது.
கால் விரல்கள் அகற்றம்: சூழல் இப்படி இருக்க; உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் பட வாய்ப்பே இல்லாமல் இருந்தது. போதாக்குறைக்கு சர்க்கரை நோயின் அளவு அதிகம் ஆனதால் அவரது கால் விரல்களும் அகற்றப்பட்டன. அந்த சமயத்தில் கலக்கப்போவது யாரு பாலா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் எல்லாம் உதவி செய்தார்கள்.
அமைச்சரின் உதவி: நிலைமை ஓரளவுக்கு சரியாகியிருக்கும் என்று நினைத்த வேளையில்; சில நாட்களுக்கு முன்பு அவர் தங்குவதற்கு வீடின்றி தவிப்பதாக தெரியவந்தது. அதனை தெரிந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று அவரை சந்தித்து; எம்.எல்.ஏ ஹாஸ்டலில் ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்தார். இவர் தவிர்த்து லெஜண்ட் சரவணனும் தன்னால் முடிந்த நிதியுதவியை அளித்தார்.
ரஜினி செய்யும் உதவி: இந்நிலையில் தனக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி குறித்து பாவா லட்சுமணன் பேசியிருப்பது இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். எம்.எல்.ஏ ஹாஸ்டலில் வீடு கிடைத்துவிட்டதாக ரஜினியின் உதவியாளரிடம் சொன்னேன். அவர்கள் சந்தோஷப்பட்டாரக்ள். மேலும் பத்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் போடுகிறோம். செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் எனவும் சொன்னார்" என்றார்.


Click it and Unblock the Notifications
