மீண்டும் ‘வி’....அஜித் படத்தின் சென்டிமெண்ட்டை ரஜினிக்கும் பயன்படுத்துகிறாரா சிவா?
சென்னை: சிவா இயக்கும் ரஜினியின் 168-வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்துக்கு 'வியூகம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துள்ள "தர்பார்" படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் படத்தில் ரஜினி நடிப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் ரஜினியுடன், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
தற்போது புதிதாக படத்தை பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கும் எனவும், இப்படத்திற்கு வியூகம் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுத்தை படத்தை தவிர சிவா இயக்கிய அனைத்து படங்களின் பெயர்களும், 'வி’ வரிசையில் தான் அமைந்தன. அதாவது, அஜித் - சிவா கூட்டணி இணைந்து வெளியான படங்கள் அனைத்துமே 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என அனைத்துமே ’V’ சென்டிமெண்ட்டில் இருந்தது.
அதே சென்டிமெண்டையே ரஜினி படத்துக்குத் தொடர, சிவா முடிவு செய்துள்ளதாகவும், அதனால் 'வியூகம்' என வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத உச்சம்.. ஷாருக்கானை கெளரவித்த புர்ஜ் கலிஃபா!
ஆனால் இது குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.
எந்த அறிவிப்பையுமே மிக பிரம்மாண்டமாக அறிவிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினி படத்தின் அறிவிப்புகளுக்கு எப்படி விளம்பரப்படுத்துமென கூறத் தேவையில்லை. ஒருவேளை ரஜினியின் பிறந்த நாளுக்கு இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications











