தர்மன் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங்.. ரஜினிகாந்த் சும்மா கெத்தா இருக்காப்ல.. ஸ்டைல் கிங்னா சும்மாவா?

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ஒருவழியாக இயக்குநரை இறுதி செய்துவிட்டார்கள். ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கிய் அஷ்வத் மாரிமுத்துதான் படத்தை இயக்குகிறார். தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கடந்த வருடத்தில் அறிவிப்பு வெளியானது. முதலில் சுந்தர்.சி இயக்குநராக கமிட்டானார். ஆனால் கமிட்டான சில நாட்களிலேயே அவர் படத்திலிருந்து வெளியேற; அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டார். அவரும் கதையை இறுதி செய்துவிட்டு ஷூட்டிங் தொடங்குவதற்கு தயாராக இருந்தார். என்ன நடந்ததோ தெரியவில்லை; அவரும் வெளியேறிவிட்டார். இதனால் அந்தப் படம் குறித்து பெரும் குழப்பங்கள் நிலவின.

Rajinikanth s Dharman First Look Making Video Goes Viral Fans Spot Ashwath Marimuthu s Influence
Photo Credit:

அஷ்வத் மாரிமுத்து இயக்குநர்: யார்தான் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில்; டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கமிட்டாகியிருக்கிறார். டிராகன் ரிலீஸான சமயத்தில் ரஜினி அவரை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது சொன்ன ஐடியா அவருக்கு பிடித்து போக; அதை டெவலப் செய்ய சொல்லியிருக்கிறார். மொத்த கதையும் ரஜினி, கமலுக்கு பிடித்துவிட்டதால் அவரையே இயக்குநராக ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள்.

Also Read
பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு?.. இப்படி மாறிட்டாங்களே பாஸ்.. இதுவும் அழகுதான்
பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு?.. இப்படி மாறிட்டாங்களே பாஸ்.. இதுவும் அழகுதான்

ரஜினியின் தர்மன்: படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருடன் சிம்ரன், ராஷி கண்ணா நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நேற்றுதான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய ரஜினி, "முதலில் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமாரை இயக்குநராக ஃபிக்ஸ் செய்தோம். அதனையடுத்து சுந்தர்.சி, சிபி சக்கரவர்த்தியை இறுதி செய்தோம். அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்துக்கு நான்காவது இயக்குநர். நான் பேசினாலே பிரச்னைதான். சிவாஜி படத்துக்கு பிறகே கமல் தயாரிப்பில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தள்ளிப்போய்விட்டது. இப்போது சேர்ந்துவிட்டோம்" என பல விஷயங்களை பேசினார்.

அஷ்வத் மாரிமுத்து சொன்னது: படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், "இது பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும். கமலுக்கு படம் செய்வதால் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும் என்று ரஜினி சார் என்னிடம் சொல்லியிருந்தார். இவ்வளவு வளர்ந்த பிறகும் முதல் படம் போல் ஒரு படத்தை அவர் அணுகுவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் கலந்த கலவையாக இருக்கும்" என தெரிவித்திருந்தார்.

மேக்கிங் வீடியோ: இது ஒருபக்கம் இருக்க நேற்று வெளியான தர்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கொஞ்சம் ட்ரோல்களையும் சந்தித்தது. அதாவது ரஜினியின் லுக்கையும், அவர் நிற்கும் ஸ்டைலையும் பார்க்கையில் பிரதீப் ரங்கநாதன் உடலில் சூப்பர் ஸ்டார் தலையை ஒட்ட வைத்தது போல் இருப்பதாக சிலர் கூறினார்கள். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் அஷ்வத் மாரிமுத்து முதலில் நின்று காண்பிக்க; அதை உள்வாங்கிக்கொண்டு ரஜினியும் ஸ்டைலாக நிற்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X