ரஜினியுடன் மோதும் தனுஷ்.. முன்னாள் மருமகன் சிக்குவாரா? தப்பிப்பாரா?.. இப்படி ஆகிப்போச்சே

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த்தும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் தனுஷும் நடித்திருக்கிறார்கள். இரண்டு படங்களும் இப்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாவதால் ரஜினிகாந்த் vs தனுஷ் என்ற போட்டி உருவாகியிருக்கிறது

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக திகழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் சில வருடங்களுக்கு பின்பு பிரிவை அறிவித்து; சட்டப்பூர்வமாக விவாகரத்தையும் பெற்றுவிட்டார்கள். குழந்தைகளை அவர்கள் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்த்துவருகிறார்கள். இரண்டு பேரையும் எப்படியாவது மீண்டும் சேர்த்துவிட வேண்டும் என்பதில் ரஜினி தீவிரமாகத்தான் இருந்தார். ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை.

Rajinikanth Vs Dhanush Box Office Clash - Jailer 2 And Om Movies Set For Back-to- Back Releases
Photo Credit:

கரியரில் கவனம்: ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் இப்போது சிங்கிளாக இருக்கிறார். தனது கரியரில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் கர, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன், குபேரா என நான்கு படங்கள் வெளியாகின. இவற்றி இட்லி கடை தவிர்த்து மற்ற மூன்று திரைப்படங்களும் தோல்வியையே சந்தித்தன. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கர திரைப்படம்; தனுஷின் கரியரில் தோல்வி கறையையும் கொடுத்திருக்கிறது.

Also Read
Gatta Kusthi 2 X Review - கட்டா குஸ்தி 2 எக்ஸ் விமர்சனம்.. படம் பாஸா? ஃபெயிலா?
Gatta Kusthi 2 X Review - கட்டா குஸ்தி 2 எக்ஸ் விமர்சனம்.. படம் பாஸா? ஃபெயிலா?

தனுஷின் ஓம்: இப்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில்தான் படத்தின் பெயரும் வீடியோவோடு அறிவிக்கப்பட்டது. அந்த வீடியோவில், படம் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எப்படியாவது அந்தப் படம் ஹிட்டாகிட வேண்டும் என D ரசிகர்கள் வேண்டாத தெய்வம் இல்லை.

போட்டிக்கு வரும் ஜெயிலர் 2: இதற்கிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடித்தார். இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கூலி படத்தின் நிலைமையை சொல்லி தெரியப்படுத்த வேண்டியதில்லை. தோல்வியையும், ட்ரோலையும் ஒருசேர சந்தித்தது. இதனால் ஜெயிலர் 2 திரைப்படத்தின் மீது ரஜினியும் அவரது ரசிகர்களும் அபார நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். நேற்றுதான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

யார் வெல்வார்?: அதன்படி படமானது அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸாகிறது. அதாவது, தனுஷின் ஓம் ரிலீஸாவதற்கு ஒருநாள் முன்னதாக ஜெயிலர் 2 வருகிறது. இதன் காரணமாக இந்த வருடம் ரஜினி Vs தனுஷ் என்ற போட்டி உருவாகியிருக்கிறது. ரஜினியின் மகளை விவாகரத்து செய்த பிறகு அவரது படத்துடன் தனுஷ் முதன்முறையாக போட்டி போடுகிறார். எனவே இதில் வெற்றி பெறுவாரா இல்லை ரஜினி அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு போய்விடுவாரா என்பதை பார்க்க திரைத்துறையே உச்சக்கட்ட ஆர்வத்தில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X