பாபா படம் ஓடும்போதே ரன் படத்துக்கு வந்தாங்க.. அப்படி சம்பவம் செய்ததா?.. பழைய நினைவில் லிங்குசாமி
சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன். மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்றுவரை அந்தப் படமும் ஒரு உதாரணமாக இருக்கிறது. அந்தப் படமானது ஜூலை பத்தாம் தேதி ரீ ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த லிங்குசாமி தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
ஆனந்தம் படத்தில் இயக்குநராக அறிமுகமான லிங்குசாமி; முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்றுவிட்டார். அடுத்த படமாக மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன், அனுஹாசன், அதுல் குல்கர்னி உள்ளிட்டோரை வைத்து ரன் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் முதலில் விஜய்தான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற; மாதவன் வந்தார். வித்யாசாகர் இசையமைத்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் படம் ரிலீஸானது.

படம் மெகா ப்ளாக் பஸ்டர்: அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. லிங்குசாமியின் மேக்கிங், அதிரடி ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள் என அத்தனையும் சரியான மீட்டரில் ஒர்க் அவுட் ஆகியிருந்தன. முக்கியமாக, சப் வே சண்டை காட்சியில் மாதவன் ஷட்டரை இறக்கிவிடும் காட்சியை இப்போது பார்த்தாலும் கூஸ்பம்பஸ்தான். மேலும், அப்படி மாதவனை ஷட்டரை இறக்க வைத்து அதற்குள் நானே கமர்ஷியல் இயக்குநராக லாக் ஆகிவிட்டேன் என லிங்குசாமி ஒரு பேட்டியில் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.
ரீ ரிலீஸாகும் படம்: இப்போது லிங்குசாமி மார்க்கெட் போன இயக்குநராக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க ரன் திரைப்படம் ஜூலை பத்தாம் தேதி ரீ ரிலீஸாகவிருக்கிறது. முதலில் ரிலீஸானபோது எப்படி பெரிய ரெஸ்பான்ஸை பெற்றதோ அதேபோன்ற ரெஸ்பான்ஸை இப்போதும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90ஸ் கிட்ஸும் அப்போது தியேட்டரில் மிஸ் செய்த ரன் படத்தை இப்போது பார்த்துவிட வேண்டும் என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்குசாமி செய்தியாளர் சந்திப்பு: இந்நிலையில் லிங்குசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ரன் ரிலீஸ் சமயத்தில்தான் பாபாவும் ரிலீஸானது. பாபா வருவதால் அனைத்து படங்களையும் தள்ளிப்போட்டார்கள். அப்போது தயாரிப்பாளர் ரத்னத்திடம், 'சார் பாபா படத்துக்காக எல்லா படங்களையும் தள்ளுகிறார்கள். நம் படத்தை தள்ள வேண்டாம். நான் ரஜினியின் தீவிர ரசிகன். எனவே ரஜினியின் படமும், அவரது ரசிகராகிய எனது படமும் ஒன்றாக வருகிறது என ஒரு கடிதம் ரெடி செய்கிறேன் என சொன்னேன்.
ரத்னத்திடன் முடிவு: ஆனால் ரத்னம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பாபா படம் ரிலீஸின்போது அப்படி இருந்தது. எனவே அந்த பயத்திலேயே ஒன்றாக ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பாபா பட ரிலீஸுக்கு பிறகு சரியாக போகவில்லை. அதேசமயம் அந்தப் படம் மால் தியேட்டர்களில் ஓடும்போது; அங்கே இருந்து ரன் படம் ஓடும் தியேட்டருக்கு வந்து, 'தேரடி வீதியில்' பாடலையும், அந்த ஷட்டர் சண்டை காட்சியையும் பார்த்துவிட்டு ரசிகர்கள் செல்வதை நானே பார்த்திருக்கிறேன்.
ரஜினியுடன் சந்திப்பு: அதேபோல் பாபா பட ரிலீஸுக்கு பிறகு பெங்களூரு போய்விட்டார் ரஜினி. அங்கிருந்து கேட்கும்போது எல்லோருமே ரன் ரன் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் தமிழ்நாடு வந்த பிறகு என்னை சந்திக்க விரும்பினார். நானும் நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தேன்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்த சந்திப்பு போனது" என்றார்.


Click it and Unblock the Notifications
