ரஜினி ரசிகர்களுக்கு சரவெடி.. ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி வந்தாச்சு.. இன்னும் 2 மாதங்களில் தீபாவளி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக கலக்கிவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கூலி திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 வரவிருக்கிறது. இந்நிலையில் படத்திலிருந்து இன்று அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு; அதன்படி வெளியாகவும் செய்திருக்கிறது.

ரஜினிகாந்த் இந்திய திரைத்துறையின் அடையாளம். அவர் நடிப்பில் தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் வரிசையாக தோல்வியடைந்தபோது; இனிமேல் அவர் அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். அப்படிப்பட்ட நிலைமையில்தான் நெல்சன் திலீப்குமாருடன் ஜெயிலர் படத்தில் இணைந்தார். அதற்கு முன்னதாக நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படம் தோல்வியடைந்திருந்ததால் ரசிகர்களில் யாருக்குமே நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது.

Rajinikanth s film Jailer 2 is set to be released on October 15
Photo Credit:

படம் மெகா ஹிட்: ஆனால் ரஜினிகாந்த் முழு நம்பிக்கை வைத்து நடித்தார். அந்த நம்பிக்கையை நெல்சனும் காப்பாற்றிவிட்டார். அவரது தரமான வேலைப்பாடு காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அந்த ஹிட் கொடுத்த உற்சாகத்தோடு ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்துக்கும் பிளான் செய்தது படக்குழு. நெல்சனும் முழு ஈடுபாட்டுடன் ஸ்க்ரிப்ட் வேலைகளில் இறங்கி ஷூட்டிங்கையும் ஆரம்பித்தார்.

Also Read
கருப்பு படம் பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதன் சொன்னது.. மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி
கருப்பு படம் பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதன் சொன்னது.. மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் ஷாருக்கான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ஒத்துக்கொள்ளாததால்; அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷனை கமிட் செய்துவிட்டார் நெல்சன். மேலும் வித்யா பாலனும் முக்கியமான ரோலை ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. எப்போதும்போல் ரஜினி படத்துக்கு அனிருத்தே இசையமைத்திருக்கிறார்.

ஷூட்டிங் ஓவர்: ஜெயிலர் 2 ஷூட்டிங் தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியாவின் பல பகுதிகளில் மும்முரமாக நடந்தது. சமீபாத்தில்தான் ஹிருத்திக் ரோஷனை வைத்து காட்சிகளையும் இயக்குநர் ஷூட் செய்ததாக கூறப்படுகிறது. ரஜினியின் போர்ஷனை பொறுத்தவரை டப்பிங் தவிர்த்து அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டதாம். இந்நிலையில் படத்திலிருந்து முக்கியமான அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயிலர் 2 அப்டேட்: அதன்படி படத்திலிருந்து அப்டேட் ஒன்று வந்திருக்கிறது. அதன்படி படமானது அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்போடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் இடம்பெறும் காட்சிகள் இருக்கின்றன. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X