கருப்பு படம் பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதன் சொன்னது.. மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி
சென்னை: கோலிவுட்டில் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த மூன்று படங்கள் வரிசையாக ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. கடைசியாக நடித்த எல்ஐகே திரைப்படம் மட்டும் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் டிராகன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து கருப்பு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசியிருக்கிறார்.
குறும்படங்கள் இயக்கிவிட்டு; அந்த அனுபவத்தின் அடிப்படையில் வெள்ளித்திரைக்கும் வந்தவர் பிரதீப் ரங்கநாதன். அவர் ரவி மோகனை வைத்து தன்னுடைய முதல் படமாக கோமாளியை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது படத்தை இயக்கி அவரே ஹீரோவாகவும் நடிக்க செய்தார். அந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. அதிலிருந்து ஹீரோவாக சில காலம் தொடர்வது என முடிவெடுத்துவிட்டார்.

இரண்டு படங்கள் மெகா ஹிட்: அதன்படி அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்திலும், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் திரைப்படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அவர் ஹீரோவாக நடித்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ஹிட்டாகி 100 கோடி க்ளப்பில் சேர்ந்தது ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையையும் ஆச்சரியத்தில்தான் ஆழ்த்தியது. அவரும் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார்.
அடுத்த படங்கள்: அடுத்ததாக அவர் டிராகன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. அதேசமயம் ஹை பட்ஜெட்டில் சைன்ஸ் ஃபிக்ஷன் கதை ஒன்றை அவர் வைத்திருப்பதாகவும்; நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு அந்தப் படத்தை பிரதீப் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி பேட்டி: இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கோலிவுட்டில் இப்போது இருக்கும் புத்திசாலியான நபர் என்றால் அவர் பிரதீப் ரங்கநாதன் மட்டும்தான். அவர் அசாதாரணமான அறிவாற்றலை கொண்டிருக்கிறார். ஒரு விஷயத்தை எப்படி திட்டமிட வேண்டும், எப்படி பேக்கேஜ் செய்ய வேண்டும், ரசிகர்களிடம் எப்படி அதை கொண்டு சேர்க்க வேண்டும் என நன்றாகவே அவருக்கு தெரிந்திருக்கிறது.
கருப்பு பார்த்துவிட்டு: நான் இயக்கிய கருப்பு படத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் படத்தில் சில அம்சங்களை பாராட்டிய விதமே அவரது புத்திசாலித்தனத்தை காண்பித்தது. டியூட் படத்தின் முதல் ஷோவை பார்த்தேன். அந்த முழு படத்திலும் தனது எனர்ஜியால் மட்டுமே ஸ்க்ரீனை பரபரப்பாக வைத்திருந்தார். அதேபோல் எல்கேஜி படத்துக்கு அவரும் டயலாக்குகளை எழுதி கொடுத்தார்.
சாதாரண சாதனை இல்லை: அதில் சில வசனங்களை மட்டுமே நாங்கள் படத்தில் பயன்படுத்திக்கொண்டோம். ஒரு பெரிய நட்சத்திரமாக மாற தேவையான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் அவரை மாதிரி ஒரு ஸ்டார் இருப்பார். தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் படங்களை கொடுப்பது ஒன்றும் சாதாரண சாதனை இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
