தலைவர் 173 ஷூட்டிங் ஆரம்பம்?.. சத்தமே இல்லாமல் ஸ்டார்ட் ஆகிடுச்சே பாஸ்
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை இயக்கு வாய்ப்பினை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் சுந்தர்.சி. அவர் இப்படத்திலிருந்து வெளியேறியதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட சுந்தர் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். அவரும் விலக; இப்போது அஸ்வத் மாரிமுத்துதான் இயக்குநராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், விண்வெளி நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக முதலில் தகவல்கள் பரவின. ஆனால் அந்தப் படம் லேட்டாக ஆரம்பிக்கப்படும் என்றும் முதலில் ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிப்பார் என்று சொல்லியும் சுந்தர்.சியை இயக்குநராக கமிட் செய்தார்கள். இளம் இயக்குநர்கள் வரிசையாக ரஜினிக்கு சொதப்பலான படங்களை கொடுப்பதால் சீனியர் இயக்குநருடன் இணைந்தார் ரஜினிகாந்த். கமலும் தனது ஃபுல் சப்போர்ட்டை கொடுத்தார்.

விலகிய சுந்தர்.சி: சுந்தர்.சியும் ஹிட் படம் கொடுக்கக்கூடிய இயக்குநர்தான் என்பதால் ரசிகர்கள் முதலில் அவரது பெயர் அறிவித்தபோது கொஞ்சம் முணகினாலும் அவர்கள் மனதில் மத கஜ ராஜா திரைப்படத்தின் ரிசல்ட் வந்து இதம் கொடுத்தது. ஆனால் திடீரென ட்விஸ்ட்டாக இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் அவர். ரஜினி - கமல் இணையும் படத்தில் பணியாற்ற அனைவருமே ஏங்கிக்கொண்டிருக்க இவர் வெளியேறியது அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது.
விலகியதற்கு என்ன காரணம்?: அவரது இந்த விலகலுக்கு பலரும் பலவித காரணங்களை சொல்கிறார்கள். முதலில் இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவாக்க சுந்தர் விரும்பியதாகவும்; அதற்கு கமல் ஒத்துவராததால் இந்த வெளியேற்றம் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அப்படி வெளியான அத்தனை தகவல்களையும் திட்டவட்டமாக மறுத்திருந்தார் சுந்தர்.சி. மேலும், எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் அதிலிருந்து வெளியேறியதாகவும் விளக்கமளித்திருந்தார்.
சிபியும் விலகல்: அவர் வெளியேறியதைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்குநராக கமிட் ஆனார். ஒரு படத்தின் விழாவிலும் பேசிய அவர், 'எல்லோருக்கும் பிடிக்கும்படியான படமக தலைவர் 173ஐ கொடுப்பேன். இது சத்தியம்' என உறுதியளித்திருந்தார். ஆனால் அவரும் இப்போது படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும்; அவர் சொன்ன கதையில் அப்புறம் நடிக்க ரஜினி முடிவெடுத்ததாகவும் தெரிகிறது.
ஷூட்டிங் ஆரம்பம்?: சுந்தர், சிபியை தொடர்ந்து இப்போது அஸ்வத் மாரிமுத்துதான் இயக்குநராக கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்துக்காக அவர் சிம்பு படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கிவிட்டதாகவும்; இதில் ரஜினி பங்கேற்கவில்லை. மாறாக அவர் இல்லாத பாடல் காட்சிகளை சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃபியில் அஸ்வத் இயக்கியிருக்கிறாராம்.இந்த ஷூட்டிங்கில் இன்னும் நான்கு நாட்களுக்குள் ரஜினியும் பங்கேற்பார் என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
