தலைவர் 173ல் பஞ்சாயத்து?.. சிவகார்த்திகேயனின் சேயோனை வைத்து சமாளிக்கும் கமல்?.. என்னங்க நடக்குது?

சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படம் தலைவர் 173. அந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் சில காரணங்களால் வெளியேற; சிபி சக்கரவர்த்தி இயக்குநராக கமிட்டானார். அவரும் தற்போது அதிலிருந்து வெளியேறவிருப்பதாக அரசல் புரசலாக தகவல்கள் ஓடுகின்றன. இந்நிலையில் தலைவர் 173 பற்றி புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது.

ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் KHXRK படத்துக்கு முன்னதாக; ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிக்கிறார்.முதலில் அந்தப் படத்தை இயக்க சுந்தர்.சி கமிட்டானார். இரண்டு பேரிடமும் நீண்ட வருடங்களாக நட்பில் இருப்பவர் சுந்தர். மேலும் ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் படத்தை இயக்கியவர். அதுமட்டுமின்றி திரைத்துறைக்கு அவர் வந்து பல வருடங்களானாலும்; இன்னமும் டாப் 10 இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini s Thalaivar 173 Delayed Kamal Reportedly Sivakarthikeyan s Seyon For Pongal 2027
Photo Credit:

வெளியேறிய சுந்தர்.சி: சூழல் இப்படி இருக்க திடீரென அவர் இந்தப் படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதுமட்டுமின்றி இரண்டு பேருடனும் பிரச்னை; அதனால்தான் அவர் வெளியேறிவிட்டார் என்றெல்லாம் கதைகளை கட்ட தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதை சுந்தர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். வருங்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் படம் செய்யலாம் என சொல்லித்தான் ரஜினியும், கமலும் தன்னை அனுப்பி வைத்தார்கள் என்றும் விளக்கினார்.

Also Read
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் KHXRK.. நெல்சன் என்ன பண்ணப்போறாரு?.. ஸ்ருதிஹாசன் ஓபன்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் KHXRK.. நெல்சன் என்ன பண்ணப்போறாரு?.. ஸ்ருதிஹாசன் ஓபன்

சிபி சக்கரவர்த்தி இயக்குநர்: சுந்தர்.சி வெளியேறியதைத் தொடர்ந்து இயக்குநராக சிபி சக்கரவர்த்தி கமிட்டானார். அனைவரும் விரும்பும்படியான படத்தைத்தான் கொடுப்பேன் என்று ஒரு விழாவில் உறுதியும் கொடுத்திருந்தார். ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை; ஷூட்டிங் இன்னமும் தொடங்கவில்லை என்றே தெரிகிறது. முக்கியமாக சிபி இந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

பின்வாங்கிய தலைவர் 173?: இப்படத்தை சிபி இயக்குகிறார் என்ற அறிவிப்பு போஸ்டரிலேயே 2027 பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் நடக்கும் சில குழப்பங்களாலும், ஷூட்டிங் இன்னும் தொடங்காததாலும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதை கஷ்டம் என்று உணர்ந்த கமலின் ராஜ்கமல் நிறுவனம்; அந்தப் படத்துக்கான ஸ்லாட்டில் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எஸ்கேவின் சேயொன்: சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தையும் கமல்ஹாசனே தயாரித்துவருகிறார். அதனை தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். ஏற்கனவே அமரன் படத்தை எஸ்கேவை வைத்து கமல் தயாரித்தார். அந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல் சேயோனும் வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையினரிடம் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X