துரந்தர் 2 டீசர்.. அடுத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் உறுதி.. ரன்வீர் சிங் மிரட்டுறாரே ப்பா
மும்பை: ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கியிருந்த படம் துரந்தர். கடந்த வருடம் வெளியான அந்தப் படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடத்தில் அதிகம் வசூலித்த இந்திய படங்களில் இதுதான் முதல் இடத்தை பெற்றதாவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாவது பாகமான துரந்தர் 2 டீசர் ரிலீஸகியிருக்கிறது.
ரன்வீர் சிங் இந்திய அளவில் புகழடைந்த நடிகர்களில் ஒருவர். ஏராளமான ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க அவர் ஆதித்யா தார் இயக்கத்தில் துரந்தர் படத்தில் நடித்தார். ஆதித்யாவின் இயக்கம் என்பதாலும்; அவருடன் ரன்வீர் சேர்ந்திருந்ததாலும் இப்படத்தின் அறிவிப்பு பாலிவுட் திரை வட்டாரத்தில் விண்ணளவு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெய்வத்திருமகள் சாரா: இப்படம் ஹிந்தியில் மட்டுமே உருவானது. இதில் அவருக்கு ஜோடியாக தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த சாரா அர்ஜுன் நடித்திருந்தார். ஆள் வளர்ந்து அடையாளமே தெரியாமல் இருந்த அவர்; சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். அவரைத் தவிர்த்து மாதவன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் களமிறங்கியிருந்தது. கடந்த வருடத்தின் இறுதியில் படமானது ரிலீஸானது.

வட மாநிலங்களில் சூப்பர் ரெஸ்பான்ஸ்: இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த தாக்குதலை ரன்வீர் சிங் எப்படி முறியடிக்கிறார்; பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பான ரா செய்யும் விஷயங்களை ஒன்லைனை கொண்டு இப்படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். பொதுவாக தேச பக்தி படங்களுக்கு பாலிவுட்டில் வரவேற்பு அதிகம் இருக்கும் என்ற விதிக்கேற்ப இதுவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது.
45 சவரன் தங்கத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்.. ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசு.. தலைவர் மனசே மனசுதான்
உலகளவில் பெரிய வசூல்: 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பேயாட்டம் ஆடிய படம் உலகம் முழுவதும் மொத்தம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதன் காரணமாக கடந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் துரந்தர்தான் முதலிடத்தை பிடித்தது. முதல் பாகத்துக்கு தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பு மாதிரியே ஓடிடியிலும் கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்தது.
துரந்தர் 2: முதல் பாகத்தை தொடர்ந்து துரந்தர் 2 பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார்கள். மார்ச் மாதம் 19ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் துரந்தர் 2 படத்துடைய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டீசரில் முதல் பாகத்தில் இடம்பெற்றது போன்ற அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. கண்டிப்பாக இதுவும் 1000 கோடி ரூபாயை வசூலிக்கும் என ரன்வீர் ரசிகர்கள் டீசரை பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











