கருப்பு பார்த்துவிட்டு நயன்தாரா செய்த விமர்சனம்.. ஆர்.ஜே. பாலாஜி ஓபன்..மேடம் சூப்பரா சொன்னாங்களாம்

சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் கருப்பு. திரிஷா ஹீரோயினாக நடிக்க; சுவாசிகா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்கள். மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியது.இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில் கருப்பு படம் பார்த்துவிட்டு நயன்தாரா ஆர்ஜே பாலாஜியிடம் பேசியிருக்கிறார்.

ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்துக்கு கதை எழுதியிருந்தார். அதனையடுத்து மூக்குத்தி அம்மன் படத்தை அவரே இயக்கவும் செய்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. நயன்தாரா கடவுள் வேஷம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜேவாகவும், நடிகராகவும் வென்றுவிட்ட பாலாஜி; மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநராகவும் ஜெயித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விஜய்யை சந்தித்து கதை சொன்னார். ஆனால் அவரால் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

RJ Balaji Reveals Nayanthara s Review of Suriya s Karuppu She Discussed 15 Things
Photo Credit:

சூர்யாவுடன் கூட்டணி: விஜய் ஒத்துக்கொள்ளாததால்; இன்னொரு பெரிய ஹீரோவான சூர்யாவை சந்தித்து கருப்பு படத்தின் கதையை சொல்ல; அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. உடனடியாக படத்தில் கமிட்டாகி; பரபரவென்று வேலைகளும் தொடங்கப்பட்டன. சூர்யாவுடன் திரிஷா, சுவாசிகா, ஆர்ஜே பாலாஜி, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார்.

Also Read
கல்தா கொடுத்த சிவகார்த்திகேயன்?.. தனுஷை ஃபிக்ஸ் செய்த வெஙக்ட் பிரபு.. ஹிண்ட் அதுதானா?
கல்தா கொடுத்த சிவகார்த்திகேயன்?.. தனுஷை ஃபிக்ஸ் செய்த வெஙக்ட் பிரபு.. ஹிண்ட் அதுதானா?

சூர்யாவின் முனைப்பு: சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையில் நிலைமை சரியில்லை. ரொம்ப எதிர்பார்த்து நடித்த கங்குவா, ரெட்ரோ ஆகிய இரண்டு படங்களும் பெரிய தோல்வியை சந்தித்தன. எனவே கருப்பு படத்தை தியேட்டரிக்கல் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இதில் கமிட்டானார். பாலாஜியும் அதற்கு பக்கபலமாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த மே மாதம் சில சிக்கல்களை எல்லாம் கடந்து படம் தியேட்டர்களில் ரிலீஸானது.

படம் மெகா ப்ளாக் பஸ்டர்: எதிர்பார்த்தபடியே படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஃபேண்டஸியான கதையை ரியல் வாழ்க்கையில் கனெக்ட் ஆகும் விதமாக பாலாஜி கொடுத்திருந்தார். சாய் அபயங்கரின் இசையும், பாடல்களும் படத்துக்கு மைலேஜ் கூட்ட; அசுர வேகத்தில் ஓடியது படம். இதன் பலனாக உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. அதேசமயம் ஓடிடியில் வந்த பிறகு; படத்தின் க்ளைமேக்ஸ் மற்றும் ப்ரீ க்ளைமேக்ஸில் எல்லாம் சொதப்பப்பட்டிருந்த சிஜி வேலைகளை எடுத்துப்போட்டு அடிக்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

நயன் சொன்னது: இருப்பினும் அதனை கூலாக ஹேண்டில் செய்துவிட்டார் பாலாஜி. இந்நிலையில் கருப்பு படம் பார்த்துவிட்டு நயன்தாரா பேசியது தொடர்பாக இப்போது கூறியிருக்கிறார் அவர். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் கருப்பு படம் செய்வதில் இருந்தேன். அந்த சமயத்தில் ஐசரி கணேஷ், நயன்தாரா ஆகியோர் என்னிடம் பேசினார்கள். பிறகு சுந்தர்.சியும் பேசினார். நேற்று இரவுகூட நயன்தாராவிடம் பேசினேன். அவர் கருப்பு படம் பார்த்துவிட்டு; படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் நோட் செய்து பேசினார். கிட்டத்தட்ட 15 விஷயங்கள் குறித்து பேசினார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X