தமிழ் ராக்கர்ஸ் இருக்கட்டும் முதலில் இந்த ஆளுங்களை பாருங்கப்பா! #Sarkar
சென்னை: சர்கார் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டே ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் தளபதி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

படத்தை விஜய் தனது தோளில் தாங்குகிறார், இது ஒன்மேன் ஷோ என்று விமர்சனம் எழுந்துள்ளது. சர்கார் படத்தை அதுவும் ஹெச்.டி. பிரிண்ட்டில் இன்று வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.
[சர்கார் அமைக்க எம்ஜிஆரின் ரூட்டில் செல்லும் விஜய்! ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!]
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வருவதற்கு முன்பே சிலர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டே வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது வரை சர்கார் படத்தின் பல காட்சிகள் ட்விட்டரில் உள்ளது.
தமிழ் ராக்கர்ஸை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் தியேட்டரில் வீடியோ எடுப்பதை தடுக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இன்னும் சிறிது நேரத்தில் முழு படமும் ட்விட்டரில் இருக்கும்.


Click it and Unblock the Notifications











