சுப்ரீம் ஸ்டாரோட 150வது படம்... வித்தியாசமான டைட்டில் மற்றும் ப்ர்ஸ்ட் லுக் வெளியீடு
சென்னை : நடிகர் சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் இரை என்ற வெப் சீரிஸ் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
ஆஹா தமிழ் தளத்தில் வெளியான இந்த சீரிசில் காவல்துறை அதிகாரியாக அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவரது 150வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.
சாப்பாட்டை குப்பையில் கொட்டிய வனிதா.. டென்ஷனான தாமரை !'

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்
சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் சரத்குமார். மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்றுள்ள இவர் வில்லனாக அறிமுகமாகி, தொடர்ந்து ஹீரோவாக தன்னை உயர்த்திக் கொண்டவர். தற்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

இரை வெப் சீரிஸ்
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் இவர் வில்லன், கேரக்டர் ரோல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சமீபத்தில் ஆஹா தமிழ் தளத்தில் இவரது நடிப்பில் வெளியானது இரை வெப் சீரிஸ். இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் சரத்குமார்.

பொன்னியின் செல்வன் படம்
இந்த வெப் தொடரை உலகநாயகன் கமலின் உதவி இயக்குநரும் தூங்காவனம் மற்றும் கடாரம் கொண்டான் படங்களின் இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற முக்கியமான கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார்.

புனீத் ராஜ்குமார் படத்தில் சரத்
மறைந்த புனீத் ராஜ்குமார் நடிப்பில் இறுதியாக வெளியாகவுள்ள ஜேம்ஸ் படத்திலும் சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது 150வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு தி ஸ்மைல் மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி
படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் சரத்குமார். அல்சைமர் பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் அவர், ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்கிறார். தனது நோய் பாதிப்பு அதிகமாவதற்கு முன்னதாக அந்த கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்கும் கட்டாயமும் அவருக்கு ஏற்படுவதாக கதைக்களம் உள்ளது.


Click it and Unblock the Notifications











