சர்கார் கதை திருட்டு விவகாரம்: இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே
Recommended Video

சென்னை: சர்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையது என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் தெரிவித்தார். மேலும் எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் விசாரணை நடத்தி வருணின் செங்கோல் படக் கதையில் இருந்து 95 சதவீத்தை முருகதாஸ் திருடியதாக கூறினார்.
இதை எல்லாம் கேட்ட முருகதாஸ், சர்கார் படத்தின் கதை திருடப்படவில்லை என்று ஆணித்தரமாக தெரிவித்தார்.
[சர்கார் கதை திருட்டு வழக்கு: வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்]

முருதாஸ்
வருண் ராஜேந்திரன் பாக்யராஜுக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு சாதகமாக பேசுகிறார். சர்கார் கதை என் சொந்த கதை. நான் யாரிடம் இருந்தும் திருடவில்லை. அந்த அவசியமும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார் முருகதாஸ். விஜய் படம் என்பதால் பிரச்சனை வருவதாகவும் அவர் கூறினார்.

42 நாட்கள்
முருகதாஸ் மூன்று வரிகளில் கதை சொன்னார். கள்ள ஓட்டு என்ற ஒரு பிரச்சனையை வைத்து படத்தின் கதையை உருவாக்கினோம். 42 நாட்கள் ஹோட்டலில் ரூம் போட்டு ஒவ்வொரு சீனையும் உருவாக்கினோம். இது திருடப்பட்ட கதை அல்ல என்று சர்கார் படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்தார்.

மறுப்பு
வருணின் கதையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு தரப்பையும் அழைத்து பேசி சுமூகத் தீர்வு காண நினைத்தோம். ஆனால் சமரசம் செய்ய முருகதாஸ் மறுத்துவிட்டார் என்று பாக்யராஜ் தெரிவித்தார். இந்நிலையில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருட்டு
சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் என்பதை முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் வருணுக்கு ரூ. 30 லட்சம் அளித்து, டைட்டில் கார்டில் நன்றி வருண் என்று போடவும் ஒப்புக் கொண்டுள்ளார்களாம். கதையை திருடவே இல்லை, வருண் சொல்வதில் உண்மை இல்லை என்று கூறிய நிலையில் இப்படி ஒரு சமரசம் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications