'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Sarkar teaser out now

ஏற்கனவே சர்க்கார் படத்தின் இசை, பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை செந்தமிழில் வெளிவந்த சிம்டாங்காரன் பாடல் சூப்பர், டூப்பர் ஹிட்டாகியுள்ளது. வியாபார ரீதியாகவும் பல சாதனைகள் படைத்து வருகிறது படம்.

[சரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி!]

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள டீசர் படு மிரட்டலாக இருக்கிறது. டீசரின் மியூசிக் அதிர வைக்கிறது.

இந்த டீசரை பார்க்கும் போது, படத்தின் கதை ஓரளவுக்கு தெளிவாகிறது. அமெரிக்காவில் ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கும் விஜய், தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரோ ஏற்கனவே போட்டுவிடுகிறார்கள். இதனால் அரசியல்வாதிகளுடன் மோதல் ஏற்படுகிறது. மக்களுக்கு தங்களுடைய ஓட்டின் மதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் விஜய். படத்தில் அவருடைய பெயர் சுந்தர். கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் தாக்கத்தால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

'அவன் ஒரு கார்ப்பொரேட் மான்ஸ்ட்டர், உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலும் அவன எதிர்க்குரவங்கல அழிக்காம வரமாட்டான்', 'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்' போன்ற அனல் பறக்கும் வசனங்கள் டீசரில் இடம்பெற்றுள்ளன. இந்த வசனங்கள் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளும் அதிர வைக்கின்றன.

டீசரை பார்க்கும் போது படம் குறித்த எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறுகிறது. சர்க்கார் டீசரை விஜய் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரப்பி வைரலாக்கி வருகின்றர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X