“ஸ்டைலு.. டாப் டக்கர்.. ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்”.. சர்காருக்கு குவியும் பாராட்டுக்கள்!#sarkar

சர்கார் படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை: விஜயின் சர்கார் படத்தைப் பார்த்தவர்கள் டிவிட்டரில் நல்ல மாதிரியான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளியையொட்டி இன்று ரிலீசாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். தியேட்டர்களில் சர்கார் ரிலீசை திருவிழாவாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து ரிலீசாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த சில விமர்சகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு சர்கார் படம் குறித்து பதிவிட்டுள்ளனர்.

[முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல்... சர்கார் முதல் விமர்சனம்! #sarkar]

என்னா ஸ்டைலு:

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விஜய் இந்த படத்தில் செம ஸ்டைலாக இருக்கிறார். அவருடைய ஸ்டைலான உடல்மொழி கவர்ந்திழுக்கிறது. பர்ப்புள் ஒளியால் தியேட்டரே அதிருகிறது.

டாப் டக்கர்:

சர்கார் இரண்டாம் பாதி டாப் டக்கர். தன்னுடைய சக்திவாய்ந்த வசனங்களால் படம் முழுவதும் ஆளுகிறார் விஜய். தேவையான அரசியல் விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரு விரல் புரட்சி பாடல் தான் படத்தின் ஆன்மா.

ஹாட்ரிக் வெற்றி:

சர்கார் மிக நன்றாக இருக்கிறது. விஜய் - ஏஆர்முருகதாஸ் கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவருக்குமே சூப்பரான விருந்து. வசனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம்.

ஸ்ட்ராங் மெசேஜ்:

நான் ஒரு அஜித் ரசிகன். ஆனால் உண்மையாக சொல்கிறேன் சர்கார் படத்தில் விஜய் சூப்பராக நடித்திருக்கிறார். அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஸ்ட்ராங்கான மெசேஜ் படத்தில் இருக்கிறது. விஜய் செம யங்காகவும், அழகாகவும் இருக்கிறார். சர்கார் பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இண்டர்வெல் பிளாக்:

சர்கார் இண்டர்வெல் 100 வருஷத்துக்கு நின்னு பேசும். இதயத்துடிப்பை எகிற செய்யும் இண்டர்வெல் பிளாக்குடன் டாப் க்ளாஸ் படமாக இருக்கிறது சர்கார். ஆரம்பத்தில் இருந்து கைதட்டல் வாங்கும் ஒரே படம் சர்கார் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X