அப்பா கமலுக்கு அப்படி ஒரு படம்.. நன்றி லோகேஷ்.. கூலி இசை வெளியீட்டு விழாவில் ஸ்ருதிஹாசன் பேச்சு

சென்னை: லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் இணைந்திருக்கும் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்துவருகிறது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும், ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். விழாவில் ஸ்ருதிஹாசன் பேசியது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற ஆரம்பித்திருக்கிறது.

ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி திரைப்படம் இந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் இப்படமானது கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என திரைத்துறையினரும், ரசிகர்களும் நம்பிக்கையோடு ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தின் வியாபாரமும் நல்லபடியாக முடிந்ததாகவும்; அது சன் பிக்சர்ஸுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறது எனவும் தெரிகிறது.

வெளியான ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. வானளவு எதிர்பார்ப்பு வைத்திருந்த ரசிகர்கள் ட்ரெய்லரை பார்த்து கொஞ்சம் அப்செட் ஆகத்தான் செய்திருக்கிறார்கள். இதற்கிடையே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்துவருகிறது. அதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

கூலி கதை மொத்தமா ரிவீல் ஆகிடுச்சே.. டிரைலர் எப்படி இருக்கு? லோகி ஏதாவது சர்ப்ரைஸ் மிச்சம் வச்சிருப்பாரா?

ஸ்ருதிஹாசன் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றைய நாள் எனக்கு முக்கியமான நாள். ரஜினிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் சௌபின் சாஹிர் மிகவும் திறமை வாய்ந்தவர். முக்கியமாக உபேந்திராவின் ஸ்க்ரீன் பிரெசன்ஸ் படத்தில் அதிரடியாக இருக்கும். இதில் சத்யராஜின் மகளாக நடித்திருப்பதில் நிறையவே மகிழ்ச்சியடைகிறேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

Shruthi Haasan Said Thanks to Lokesh Kanagaraj in Coolie Audio Launch
Photo Credit:

லோகேஷுக்கும் நன்றி: எனக்கு கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அந்த ரோலை கொடுத்ததற்காக லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அதேபோல் என்னுடைய அப்பா கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தை கொடுத்ததற்கும் நன்றி. உங்களுடைய பெரிய ரசிகையாகிவிட்டேன் நான். அமைதியாகவும், நம்முடன் ஒன்றிணைந்தும் செயல்படக்கூடிய இயக்குநர்தான் லோகேஷ் கனகராஜ்.

அமீர்கானுடன் நடித்தது பெருமை: அமீர் கானுடன் நடித்ததும் பெருமையாக இருக்கிறது. அனிருத்தின் இளமை காலத்திலிருந்து அவரை பார்த்துவருகிறேன். உங்களுடைய (அனிருத்) ஸ்பெஷலான பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது" என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, 'ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். கூலி திரைப்படம் 100 பாட்ஷாவுக்கு சமம்" என குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X